நடிகர் விவேக் காலமானார் - மருத்துவமனையில் உயிர் பிரிந்தது
நடிகர் விவேக் உடல்நலக்குறைவு பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று காலமானார்.
சென்னை: மாரடைப்பு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று காலமானார். அவருக்கு வயது 59. விவேக்கின் மரணம் திரைத்துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Recommended Video
திரைப்படப்படப்பிற்காக சமீபத்தில் வட இந்திய மாநிலங்களுக்கு சென்று திரும்பியிருந்தார் விவேக். வெள்ளிக்கிழமை காலையில் அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்தார்.

விவேக்கின் மனைவியும் மகளும் உடனடியாக அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பரிசோதனை முடிவில் ஆஞ்சியோ அறுசை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அவரது இதயத்தில் 100 சதவிகித அடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
விவேக்கிற்கு மூச்சுத்திணறலும் இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விவேக்கிற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிக்சையும் அளிக்கப்பட்டு வந்தது. அவரது உயிரைக்காக்க மருத்துவர்கள் போராடி வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடிகர் விவேக்கின் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சின்னக்கலைவாணர் என்று அழைக்கப்படும் விவேக். தனது நகைச்சுவை நடிப்பால் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். ரசிகர்கள் மனதில் நேர்மறை எண்ணங்களை அதிகம் விதைப்பவர். சினிமாவில் நடிப்பது தவிர மரம் நடுவது உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளை செய்து வந்தார் விவேக். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று திரைத்துறை பிரபலங்களும் அவரது ரசிகர்களும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். விவேக்கின் மரணம் திரைத்துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications