ஃபார்முலா 4 கார் பந்தயம்.. உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன்
சென்னை: இந்தியாவின் முதல் ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நாளை மற்றும் மறுநாள் நடைபெற உள்ள நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் அண்ணா சாலையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தப் பந்தயம் தீவுத் திடலில் தொடங்கவுள்ளது. அங்கிருந்து பிளாக் ஸ்டாப் ரோடு, அண்ணா சாலை வழியாக மீண்டும் தீவுத்திடல் வரை பந்தயம் நடக்கவுள்ளது. பந்தயத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

பந்தயத்துக்காக கார்களை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 3.5 கிலோமீட்டர் சுற்றளவு உள்ள சர்க்யூட்டில் கார் பந்தமானது நடைபெறுகிறது. தெற்காசியாவிலேயே நீளமான சர்க்யூட் இது என்பது குறிப்பிடத்தக்கது. கொடிமர சாலை, அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் என மூன்று கிலோமீட்டர் தீவு திடலை சுற்றியுள்ள பகுதிகளில் பந்தயமானது நடக்க இருக்கிறது. இந்த கார் ரேஸை பொதுமக்களும் பார்த்து ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக அனுமதி சீட்டும் விற்கப்பட்டு வருகிறது.
மின்விளக்குகள் பொருத்துவது, 8,000 பேர் கண்டு ரசிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கும் பணிகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை நிறைவடைந்துள்ளன. கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக ரேஸ் கார்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தனியார் இடங்களிலும், அரசு அமைத்துள்ள பகுதிகளிலும் கார்கள் தற்போது நிறுத்திவைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
கார் பந்தயத்தைப் பார்க்க வரும் பொதுமக்கள் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், கலைவாணர் அரங்கம், சென்னை யூனிவர்சிட்டி, பீச் ஆகிய பகுதிகளில் தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். கூர்மையான பொருட்கள், ஆயுதங்கள், செல்லப்பிராணிகள், தீப்பற்றக்கூடிய பொருட்கள், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், விளம்பர பொருட்கள், தண்ணீர் பாட்டில், முட்டை போன்றவை, ஜாதி மத உணர்வுகளை புண்படுத்தும் பதாகைகள் விளம்பரங்கள், ஸ்ப்ரே பெயிண்ட் போன்றவற்றை பந்தயம் நடைபெறும் பகுதிக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் யுவன்சங்கர் இசையில், ஃபார்முலா கார் பந்தயத்தின் தீம் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 'லைப் என்ற ரேஸ்ல... ஸ்பீடா போகணும் லாப்புல..' என துள்ளலாகத் தொடங்கும் இந்தப் பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசை அதிரடியாக இசை அமைத்துள்ளார். அருண்ராஜா காமராஜ் பாடலை எழுதியுள்ளார்.
இந்நிலையில், நடிகர் தனுஷும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், இந்தியாவின் முதல் ஆன் ஸ்ட்ரீட் நைட் எஃப் 4 சேம்பியன்ஷிப்பை சென்னையில் நடத்துவதற்கு வாழ்த்துகள். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பின் கீழ் நடைபெறும் இந்தப் பந்தயம், சென்னையின் அந்தஸ்தை உயர்த்தி, இந்தியாவை ஒரு முக்கிய விளையாட்டு நிகழ்வுகளுக்கான மையமாக மாற்றும் என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஃபார்முலா கார் பந்தயத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். யுவன் இசையமைத்துள்ள கார் பந்தயம் குறித்த முழு தீம் பாடலையும் யூடியூப் லிங்க்குடன் பகிர்ந்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், தெற்காசியாவின் முதல் ஆன் ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா சாம்பியன்ஷிப்பை சென்னையில் நடத்துவதற்கு வாழ்த்துகள். இந்த முயற்சி வெற்றியடைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக நடிகர் கார்த்தியும் பதிவிட்டுள்ளார். நம்முடைய சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் நடைபெறுகிறது. இந்த விளையாட்டுக்கு தைரியம், திறன், துடிப்பான இளமை ஆகியவை முக்கியம். நமது துடிப்பான மெட்ராஸுக்கு இந்த கார் ரேஸ் மிகச்சிறந்த பொருத்தம். இந்த துணிச்சலான முயற்சியை கையில் எடுத்து தமிழ்நாட்டில் மோட்டார் விளையாட்டு வரலாற்றை உருவாக்குவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல, நடிகர் கமல்ஹாசனும் எக்ஸ்தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், சென்னையில் ஃபார்முலா 4 பந்தயம் நடத்துவது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நமது விருந்தோம்பல், விளையாட்டுத் திறமை ஆகியவற்றை காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக சென்னையை மாற்றியதற்கு ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி, இந்தப் பந்தயத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications