ஜெயலலிதா டூ சரத்குமார்.. சினிமாவில் இருந்து நாடாளுமன்றம்..! டெல்லியில் ஜொலித்த தமிழ் நட்சத்திரங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேரறிஞர் அண்ணா தொடங்கி தற்போது தளபதி விஜய் வரை சினிமாவில் இருந்து அரசியல் வந்து சாதனை படைத்த கலைஞர்கள் ஏராளம். சினிமா தமிழகத்திற்கு நான்கு முதலமைச்சர்களை கொடுத்திருக்கிறது.

அண்ணா, எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா என நான்கு சினிமா பிரபலங்கள் மக்கள் மனதில் இடம்பெற்று தேர்தலை சந்தித்து தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்துள்ளனர். இன்னும் பல பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Lok Sabha Election 2024 Cinema Parliament 2024

அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என தமிழக அரசியல் பல சினிமா கலைஞர்களை சந்தித்து இருக்கிறது. அந்த வகையில் நாடாளுமன்றத்தை அலங்கரித்த தமிழ் துறை பிரபலங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜெயலலிதா: சினிமா துறையில் இருந்து நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த பெருமையைப் பெற்றவர் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா. எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அப்போது அவர் அண்ணாவின் இருக்கையில் அமர்ந்திருந்தது, அவரது முதல் பேச்சைக் கேட்டு இந்திரா காந்தி உள்ளிட்ட பல தேசிய தலைவர்களும் வியந்து பாராட்டியது வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வு.

வைஜெயந்திமாலா: இந்திய சினிமாவில் முகமாக இருந்தவர் நடிகை வைஜெயந்தி மாலா தமிழ் திரை உலகில் திரைப்படங்களில் நடித்து புகழை உச்சிக்குச் சென்ற அவர் பாலிவுட்டிலும் தனது வெற்றி கொடியை நாட்டினார். 1984 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களம் கண்ட இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனதா கட்சி தலைவர் இரா.செழியனை தோற்கடித்து முதல்முறையாக எம்பி ஆனார். தொடர்ந்து 1989 ஆம் ஆண்டு அதே தொகுதியில் திமுக வேட்பாளர் ஆலடி அருணாவை தோற்கடித்தார்.

ஜெயபிரதா: இந்திய அளவில் பிரபல நடிகையாக இருந்த ஜெயபிரதா 1993 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். பிறகு 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்டு எம்பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நெப்போலியன்: அதுக்கு அடுத்தபடியாக குறிப்பிடத்தக்க முகங்கள் என்றால் சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமாகி இருந்த நடிகரும் அமைச்சர் கேஎன் நேருவின் உறவினருமான நெப்போலியன். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் சமூகநீதி துறையில் அமைச்சராகவும் பதவி வகித்தார்.

ராமராஜன்: மக்கள் நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட 'கிராமத்து நாயகன்' ராமராஜன் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதிமுக சார்பில் 1998 தேர்தலில் களம் கண்ட அவர் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். நெப்போலியன் ராமநாதருக்கு ஒரு ஒற்றுமை இருக்கிறது. இரண்டு பேரின் இயற்பெயருமே குமரேசன் என்பதுதான் அது.

சரத்குமார்: தற்போது சினிமாவிலும் அரசியலிலும் பிஸியாக இருக்கும் சரத்குமார் 2001 ஆம் ஆண்டு திமுக சார்பில் மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்னர் 1998 நடந்த மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்திருந்தார்.

பிரபலங்கள்: இவர்கள் மட்டும் அல்லாது நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காமெடி நடிகரும் பத்திரிகையாளருமான சோ, நடிகர் எஸ்எஸ் சந்திரன், இசைஞானி இளையராஜா, சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகை சுமலதா, குத்து படத்தில் நடித்திருந்த திவ்யா, நடிகர் ஜேகே ரித்திஷ் உள்ளிட்ட பலரும் திரை உலகில் இருந்து பின்பு அரசியலிலும் தடம் பதித்தவர்களில் முக்கியமானவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+