மாஸ் காட்டிய சூர்யா.. கமலின் தக் லைஃப்! அஜித் வேற அறிக்கை விட்டாரே! விஜயை ரவுண்ட் கட்டும் கோலிவுட்?
சென்னை: நடிகர் சூர்யா நடத்திய அகரம் அறக்கட்டளை நிகழ்ச்சி, சினிமாவை தாண்டி அரசியல் களத்திலும் பேசுபொருளாக மாறி இருக்கிறது. அந்த நிகழ்வில் கமலஹாசன் பேசியது விஜயை குறிப்பிட்டு என்கின்றனர் திரையுலகினர். மேலும் ரசிகர்களை சுயநலத்திற்காக பயன்படுத்த மாட்டேன் என அஜித்குமார் தனியாக அறிக்கை விட்ட நிலையில், நடிகர் விஜயை அனைத்து நடிகர்களும் ஒன்று சேர்ந்து எதிர்க்கின்றனர் என்கிறார்கள் தமிழக வெற்றி கழகத்தினர்.
தமிழக அரசியலில் புதிய வரவான விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறார். நடிகர் விஜய்க்கு அரசியல் ஆசை இன்று நேற்று வந்ததல்ல. பல ஆண்டுகளாகவே அடி மனதில் விஜய்க்கு அரசியல் ஆசை இருந்தது. ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி கொடியை அறிமுகம் செய்த போதே விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் கூறி வந்தனர்.
தந்தையுடன் ஏற்பட்ட மனக் கசப்பால் அவரிடமிருந்து விலகிய விஜய், தொடர்ந்து புஸ்ஸி ஆனந்தை மக்கள் இயக்க செயலாளராக நியமித்தார். தொடர்ந்து அரசியல் கட்சி பணிகள் துரிதப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

தொடர்ந்து சில நாட்களில் கட்சியின் கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபரில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. தொடர்ந்து கட்சியின் இரண்டாவது மாநாடு நடைபெற இருக்கிறது. மதுரையில் அதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது ஒருபுறம் இருக்க விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாகவே மாணவ மாணவிகளை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
தமிழகம் புதுச்சேரியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளை அழைத்து அவர்களுக்கு விருந்தளித்து பாராட்டி பரிசளித்தார் விஜய். அரசியல் ஆசைக்காகவே விஜய் இவ்வாறு செய்கிறார் என விமர்சனங்கள் இருந்தாலும் தமிழக அளவில் அந்த நிகழ்ச்சி பேசுபொருளாக மாறியது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் அகரம் நிகழ்ச்சி சினிமா மட்டுமல்லாது அரசியலிலும் பேசு பொருளாக மாறி இருக்கிறது. அந்த அறக்கட்டளை மூலம் 8000 மாணவ மாணவிகளை சூர்யா படிக்க வைத்து வருகிறார்.
சமீபத்தில் அது தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்ற போது பல மாணவ மாணவிகள் உருக்கமாக தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். சூர்யாவுக்கு நன்றியையும் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி சூர்யா செய்யும் நலப்பணிகள் வரலாற்றில் அவருக்கான இடத்தை நிச்சயம் தரும் என பேசி இருந்தார்.
தொடர்ந்து விளம்பரத்திற்காக விஜய் மாணவ மாணவிகளை சந்திப்பதாகவும், சூர்யா உண்மையிலேயே ஹீரோ என சமூக வலைதளங்களில் பாராட்டு மழை பொழிந்தது. கமலஹாசனின் பேச்சும் விஜயை குறிப்பிட்டு தான் இருந்தது என்றனர். இது ஒருபுறம் இருக்க திரையுலகில் 33 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு நடிகர் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ரசிகர்களை சுயநலத்துக்காக பயன்படுத்த மாட்டேன் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
இதை அடுத்து அஜித் ரசிகர்களும் பிற நடிகர்களின் ரசிகர்களும் அந்த அறிக்கையை வைத்து விஜயை விமர்சிக்க தொடங்கினர். தனது சுயலாபத்திற்காக அரசியல் கட்சி தொடங்கி ரசிகர்களை விஜய் பயன்படுத்திக் கொள்கிறார் என்ற விமர்சனமும் எழுந்தது.
இந்த நிலையில் 2026 தேர்தல் வரும் நிலையில் டார்கெட் செய்கிறது ஆளுங்கட்சி என்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர். சொல்லி வைத்தார் போல் சூர்யா, கமல், அஜித் என பலரும் விஜயை டார்கெட் செய்வதாகவும், அதனால் தான் பேச்சு, பேட்டி, அறிக்கை என கொடுத்து வருவதாக கூறுகின்றனர். ஏற்கனவே பல நடிகர்கள் அரசியலுக்கு வந்த போதும் அவர்களுக்கு இல்லாத எதிர்ப்பு விஜய்க்கு இருக்கிறது. விஜயின் வளர்ச்சியை பார்த்து சில கட்சிகள் பயப்படுகின்றன. அதனால்தான் திரையுலகில் இருக்கும் நடிகர்களை வைத்து விஜயை மிரட்ட பார்க்கின்றனர் என குற்றம் சாட்டுகின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications