"என்னை திட்டுவதற்கு வேறு ஏதாவது பாக்கி இருக்கா?" ஆர்த்தி கணேஷ்கரை பார்த்து கேட்ட முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: நான் எத்தனையோ தேர்தல் பிரச்சாரங்களில் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து பேசியுள்ளேன், ஆனால் நேற்று என்னை அவர் நேரில் சந்தித்தபோது அதையெல்லாம் மறந்துவிட்டு என் தந்தையின் இறப்புக்கு துக்கம் விசாரித்ததை நான் மறக்கவே மாட்டேன் என நடிகை ஆர்த்தி கணேஷ்கர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகை ஆர்த்தி கணேஷ்கர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: நேற்று எதிர்பாராத ஒரு விஷயம் நடந்தது. அதாவது நானும் எனது கணவர் கணேஷ்கரும் ஒரு பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தோம். அப்போது அங்கு முதல்வர் ஸ்டாலின், சில அமைச்சர்களுடன் நடைப்பயிற்சிக்கு வந்திருந்தார்.
அவரை பார்த்ததும் எனக்கு பேசுவதற்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது. நான் பல்வேறு கட்சிகளில் பணியாற்றிய போது பிரச்சாரங்களில் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தேன். இதனால் அவரை எப்படி நேருக்கு நேர் பார்த்து பேசுவது என எனக்கு தயக்கமாக இருந்தது.
சிரித்த முதல்வர்
ஆனால் அவரோ என்னை பார்த்ததும் சிரித்தார். மனிதநேயத்துடன் அவர் என்னிடம் நலம் விசாரித்தார். இதனால் ஒரு வினாடியில் எனது அச்சத்தையும் குற்ற உணர்ச்சியையும் அவரது கனிவால் துரத்தி விட்டார்.
தேர்தல் பிரச்சாரம்
என்னிடம் அவர் "தேர்தல் பிரச்சாரங்களில் என்னை பற்றி என்னென்னவோ பேசியிருக்கிறீர்கள், என்னை திட்டுவதற்கு வேறு ஏதாவது மிச்சம் மீதி இருக்கா?" என சிரித்துக் கொண்டே கேட்டார். அவர் கேட்டதும் நான் அதிர்ச்சியாகிவிட்டேன். ஆனால் அவர் கேட்ட கேள்வியில் இருந்தது எல்லாம் எளிமையும் மனிதத்தன்மையும் மட்டுமே தவிர, கோபம், கடுமை, ஆணவம் என எதுவுமே இல்லை.
தந்தையின் இறப்பு
அண்மையில் நடந்த எனது தந்தையின் இறப்பை நினைவில் வைத்துக் கொண்டு எனக்கு ஆறுதல் கூறி என் குடும்பத்தினரை அக்கறையுடன் நலம் விசாரித்தார். இதை தவிர வேறு என்ன வேண்டும். லட்சக்கணக்கான சிறிய நடிகைகளை போல் நானும் ஒரு சாதாரண நடிகை ஆனாலும் என் வீட்டில் நடந்த துக்கத்தையும் நினைவில் வைத்துக் கொண்டு, நான் பெரிய நடிகை இல்லாவிட்டாலும் எனக்கு மரியாதையும் கொடுத்து முதல்வர் எப்படி பேசினார் என்பதை என்னால் நம்ப முடியவே இல்லை.
விமர்சனம்
இப்படிப்பட்ட முதல்வரை நாம் என்னவெல்லாமோ சொல்லி விமர்சித்துவிட்டோமே என்ற மனச்சுமையுடன் அந்த சந்திப்பு முடிந்தது. அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். எத்தனையோ பணிகளுக்கு மத்தியில் எனது வீட்டில் நடந்த விஷயங்களை கூட நினைவில் வைத்துக் கொண்டு இப்படி அன்பாக பேசுகிறாரே என்ற ஆச்சரியத்துடன் நானும் அங்கிருந்து வந்துவிட்டேன். இந்த தருணத்தை நான் என் வாழ்வில் மறக்கவே மாட்டேன். இவ்வாறு ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரம்
1990-களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஆர்த்தி. இவர் லொள்ளுசபாவில் காமெடியனாக வந்தார். பின்னர் "கிரி", "படிக்காதவன்", "குட்டி" உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவர் இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக முன்னாள் முதல்வர் கருணாநிதியால் நியமிக்கப்பட்டார். தமிழக அரசின் சிறந்த காமெடி நடிகருக்கான விருதை ஆர்த்தி பெற்றுள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். மேலும் மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் தனது கணவர் கணேஷ்கருடன் ஆர்த்தி கலந்து கொண்டிருந்தார்.
கமல் மகள்
நேற்று முன் தினம் இதேபோல் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது கமல்ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். மேலும் இந்த பூங்கா நன்றாக இருக்கிறதா என கேட்டார். இந்த புகைப்படம் வைரலானது.
-
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications