விஜய் கட்சியில் இணைந்தாரா நடிகை அபிராமி? தவெக கொடி கட்டிய காரில் வந்ததால் பரபரப்பாக பேசிய ரசிகர்கள்
சென்னை: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல நடிகை அபிராமி, தவெக கொடி கட்டிய காரில் வந்திறங்கினார். இதேபோல் அந்த காரில் விஜயின் புகைப்படமும் இருந்தது. இதனால், நடிகர் விஜய்யின் கட்சியில் அபிராமி இணைந்துவிட்டாரா? என ரசிகர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் களம் இறங்குகிறது. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதற்கு விஜய் திட்டமிட்டுள்ளார். மேலும் கட்சி வளர்ச்சி பணியிலும் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த மாதம் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநில மாநட்டை நடத்தினார். இந்த மாநாட்டில், பேசிய விஜய், தமிழகத்தில் ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

மேலும் தங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என விஜய் பேசினார். விஜய் பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப்பொருளாகியுள்ளது. கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்த திட்டமிட்டுள்ள விஜய், விரைவில் மாநிலம் முழுக்க சுற்றுப்பயணம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக சொல்லபடுகிறது. விஜய் அறிவுறுத்தலின் பேரில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் மாவட்ட வாரிய சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய என். ஆனந்த், மற்ற கட்சிகளில் கூட்டம் என்றால் 200, 300 பேர் இருப்பார்கள். நமது கட்சியில்தான் 2 ஆயிரம், 3 ஆயிரம் பேர் கூடி இருக்கிறார்கள். இதுதான் தளபதி மீது வைத்திருக்கிற பாசம், அன்பு.
நமது உயிர் மூச்சு, நாடி அனைத்தும் தளபதிதான். வேறு எதுவும் இல்லை. தளபதியின் அறிவுறுத்தலின்படி கட்சியில் உழைப்பவர்களுக்கு மிக விரைவில் பதவிகள் வழங்கப்படும். யாரெல்லாம் கட்சிக்கு உழைத்தார்களோ அவர்களுக்கு தேடி போய் பதவி கொடுப்பதுதான் தமிழக வெற்றிக் கழகம். கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரையில் பதவிகள் வழங்கப்பட இருக்கிறது. நம் தலைவரை முதல்வர் அரியணையில் இருக்கையில் அமர வைப்பதற்கு நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்" என்றார்.
மறுபக்கம் தவெக கட்சியில் உறுப்பினர் சேர்க்கையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இணையதளம் வாயிலாக பலரும் தங்களை கட்சியில் இணைத்து வருவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக தவெக மாநாட்டிற்கு பிறகு விஜய் கட்சியில் சேர பலரும் ஆர்வம் காட்டுவதாகவும் சொல்லப்பட்டது. நடிகர் விஜய் திரைத்துறையில் இருந்து வந்து இருப்பதால்பதால் சினிமா பிரபலங்கள் பலரும் அவருடைய கட்சியில் இணையலாம் என பேச்சு எழுந்தது.
தாடி பாலாஜி, ஸ்ரீமன் உள்ளிட்ட ஒரு சிலரை தவிர பெரிய அளவில் யாரும் கட்சியில் இணையவில்லை. இதனிடையேயான் நடிகை அபிராமி, விஜய்யின் தவெகவில் இணைந்துவிட்டாரா என சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் இடையே விவாதம் எழுந்துள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நடிகை அபிராமி தவெக கொடி கட்டிய காரில் வந்து இறங்கினார்.
அவர் வந்த காரின் முன்பக்கத்திலும் விஜய் புகைப்படம் இருந்தது. இதனால், அபிராமி தவெகவில் இணைந்துவிட்டாரா? என நெட்டிசன்கள் பேசி வருகிறார்கள். எனினும், நடிகை அபிராமி தரப்பில் இதுகுறித்து எந்த தகவலும் சொல்லப்படவில்லை. சென்னையில் நடந்த ஜாலியோ ஜிம்கானா திரைப்பட நிகழ்ச்சிக்கு வரும் போது விஜய் கொடி கட்டபட்ட காரில் வந்து இறங்கினார்.
நடிகை அபிராமி தமிழில் நடிகர் அர்ஜூன் நடிப்பில் வெளியான வானவில் படத்தில் அறிமுகமானார். கேரளாவை சேர்ந்த நடிகை அபிராமி தமிழ்,தெலுங்கு, மலையாள மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழிலில் வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம், விருமாண்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். பிரபு தேவா நடித்துள்ள ஜாலியோ ஜிம்கானா படத்திலும் அபிராமி முக்கிய கேரக்டரில் நடித்த்ள்ளார். இந்த திரைப்படம் வரும் 22 ஆம் தேதி திரைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications