இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே! வன்மத்தை கக்காமல் இருந்தாலே நல்லது தான்! நடிகை அம்பிகா பளீர்!
சென்னை: போதை இல்லாத இந்தியா, போதை இல்லாத தமிழகம் என்கிற வாசகங்களை கேட்கும்போது காதில் தேன் வந்து பாய்கிறது எனவும், இன்னொருவர் முதுகில் குத்தாமல் இருந்தால், இன்னொருவர் மீது இருக்கும் வன்மத்தை கக்காமல் இருந்தால், அனைத்தும் நன்றாக நடக்கும் என நடிகை அம்பிகா கூறியுள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள பழைய சித்ரா திரையரங்கு அருகில் போதை இல்லாத சமூகத்தை உருவாக்க சிறப்பு குழந்தைகளில் சார்பு "வாக்கத்தான்" நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக நடிகை அம்பிகா பங்கேற்று விசில் அடிச்சு வாக்கத்தானை தொடங்கி வைத்தார்.

இதில் நூற்றுக்கணக்கான சிறப்பு குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அம்பிகா," நம்முடைய வாழ்க்கையில் சில வாசகங்களைக் கேட்க நன்றாக இருக்கும் அதே போல் தான், போதைப் பொருள் இல்லாத சமூகம்.
போதை இல்லா சமூகத்தினால் குற்றங்கள் குறைந்த சமூகம் உருவாகும் இதைக் கேட்கும் போதே நன்றாக இருக்கு. இதைக் கேட்பதற்காக சிறப்பு குழந்தைகள் பங்கேற்கும் வாக்கத்தானீல் நான் தற்போது பங்கேற்று உள்ளேன் என்பது மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது. போதை இல்லாத இந்தியா, போதை இல்லாத தமிழகம் என்கிற வாசகங்களை கேட்கும்போது காதில் தேன் வந்து பாய்கிறது.
இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் குழந்தைகள் போதை பொருளை எடுக்காமல் இருந்தால் நல்லது. போதை இல்லாத சமூகத்தால் குற்றங்கள் இல்லாத சமூகமாக மாறும் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் சந்தோஷமாக வெளியே வருவார்கள். போதை இல்லாத சமூகத்தால் அமைதியான அழகான நாளை உருவாக்க முடியும் நாளை நமதே என்பது போன்று.
அரசுக்கும் வேண்டுகோள் இருக்கிறது. அரசும் அதை கனவு காண்கிறது என்பதை உணர முடிகிறது, எனவே கண்டிப்பாக அவர்களும் முயற்சிப்பார்கள். 100% நடைபெறும் என்பன நம்முடைய சிந்தனையில் தான் உள்ளது. 100 சதவீதம் முடியவில்லை என்றாலும் 75% முடியும் என்பதும் 50 சதவீதத்திற்கு மேல் எது நடந்தாலும் அது மகிழ்ச்சி தான். எண்ணங்கள் நன்றாக இருந்தால், முதுகில் குத்தாமல் இருந்தால், இன்னொருவர் மீது இருக்கும் வன்மத்தை கக்காமல் இருந்தால், அனைத்தும் நன்றாக நடக்கும், எனவே போதை இல்லாத சமூகமும் போதை இல்லாத தமிழகம் நான் ஆசைப்படுகிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications
