Bindhu Ghosh: ரஜினி, கமல் படங்களில் நடித்த நடிகை பிந்து கோஷ் காலமானார்!
சென்னை: களத்தூர் கண்ணம்மா உள்ளிட்ட படங்களில் நடித்த காமெடி நடிகை பிந்து கோஷ் உடல்நல பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 76.
மருத்துவ செலவுக்கு கூட பணமில்லாமல் அவதிப்பட்டு வந்த பிந்து கோஷிற்கு நடிகர் விஷால், கேபிஒய் பாலா, நடிகை ஷகிலா உள்ளிட்டோர் பண உதவி செய்திருந்தனர்.

இன்று மதியம் அவர் 2 மணி அளவில் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாக அவரது மகன்கள் தெரிவித்தனர். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி சடங்குகள் நாளை நடைபெறுகின்றன.
பாடி ஷேமிங்
பாடி ஷேமிங் தவறுதான். ஆனால் 1980 கால கட்டங்களில் உடல் பருமனுடன் நடிக்க வந்த பிந்து கோஷ், குண்டு கல்யாணம் உள்ளிட்டோர் காமெடியில் கலக்கினர். இருவருமே பல்வேறு படங்களில் நடித்துள்ளனர்.
பிந்து கோஷ்
பிந்து கோஷ் ஹீரோயின்களுக்கு தோழியாக வருவார். குண்டு கல்யாணம் ஹீரோக்களுக்கு நண்பராக வருவார். அதிலும் நடிகர் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலுக்கு நடனக் குழுவினருடன் நடனமாடினார் பிந்து கோஷ்.
கோழி கூவுது
அதன் பின்னர் சினிமாவில் அறிமுகமான அவர் கோழி கூவுது, கவுரி கல்யாணம், சூரக்கோட்டை சிங்கக்குட்டி, மங்கம்மாள் சபதம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அனைத்திலும் காமெடியில் கலக்கினார். அவரது படங்கள் இப்போது வந்தாலும் கூட சிரிப்பை அடக்க முடியாது.
70 ஆண்டு கால சினிமா வாழ்க்கை
70 ஆண்டுகளாக சினிமாவில் இருந்த பிந்து கோஷுக்கு உடல் பருமனால் பல்வேறு பிரச்சினைகள் வந்தனவாம். இதனால் அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக தெரிகிறது. மேலும் வயிறு பெரியதாக இருப்பதால் அதற்கு ஒரு அறுவை சிகிச்சை செய்து தனது உடல் எடையில் 13 கிலோவை குறைத்தார்.
வீட்டை விற்ற பிந்து கோஷ்
அதன் பிறகுதான் அவருக்கு ஒவ்வொரு பிரச்சினையாக வந்தது. கர்ப்பப்பையில் பிரச்சனை இருந்ததால் அதை எடுக்க மருத்துவர்கள் கூறினராம். இதனால் அந்த அறுவை சிகிச்சைக்காக தனது சொந்த வீட்டையே விற்றாராம்.
இரு மகன்கள்
இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். பெரிய மகன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறாராம், சின்ன பையன் சென்னையில் இருக்கிறாராம். அவர்தான் சம்பாதிக்கும் பணத்தில் தாய்க்கு உதவிகளை செய்து வந்ததாக தெரிகிறது. பல ஆண்டுகளாக சினிமாவில் சம்பாதித்த பணத்தை எல்லாம் பிந்து கோஷின் கணவர் குடித்து குடித்தே அழித்துவிட்டதாகவும் ஒரு பேட்டியில் பிந்து கோஷ் தெரிவித்திருந்தார்.
கமலுக்கு போன் செய்த பிந்து கோஷ்
இதையடுத்து கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ் உள்ளிட்டோருக்கு போன் செய்த போதும் பிந்து கோஷுக்கு யாருமே உதவி செய்யவில்லை. இவர் உயிருடன் இருந்த வரை மருத்துவ செலவிற்கு என மாதம் ரூ 10 ஆயிரம் தேவைப்பட்டதாம்.
உயிரிழந்த பிந்து கோஷ்
இதைத் தொடர்ந்துதான் இந்த தகவலை கேள்விப்பட்ட பாலா, பிந்து கோஷை, ஷகிலாவுடன் வந்து பார்த்துவிட்டு சுமார் 50 ஆயிரம் ரூபாயை கொடுத்தாராம். அதன் பின்னர் விஷால் உள்ளிட்டோரும் உதவினராம். ஆனாலும் இன்று காலை முதலே பிந்து கோஷிற்கு உடல் நிலை மோசமடைந்த நிலையில் அவருடைய உயிர் பிரிந்தது. பிந்து கோஷுக்கு நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்டவை உள்ளதாக தெரிகிறது. அவருக்கு இதய நோயும் இருந்ததாக சொல்லப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications