விஜய்யை சந்திக்க வாய்ப்பு கிடைத்தும் சந்திக்காத சித்ரா.. காரணத்தை கூறிய வீடியோ வைரல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய்யை தான் ஏன் சந்திக்கவில்லை என்பது குறித்து சித்ராவே கூறிய கருத்துகள் குறித்த வீடியோவை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

28 வயதேயான சித்ரா பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களை உலுக்கியது. அதிலும் அவரது மரணத்தில் மர்மம் நீடித்து வருவதாகவே பெற்றோர், நண்பர்கள், ரசிகர்கள் கருதுகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்துவிட்டார் சித்ரா. அத்துடன் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியல் மூலம் காமெடியும் செய்து ரசிகர்களை தன்வசப்படுத்திவிட்டார்.

போலீஸார்

சித்ராவுக்கு என்னவாயிற்று என்பதை கண்டறிய போலீஸார் அவரது கணவர் ஹேம்நாத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் சித்ராவின் மாமனார் ரவிச்சந்திரனிடமும் விசாரணை நடத்த உத்தேசித்துள்ளார்கள். பெரும்பாலான திரைத்துறையினருடன் பழகிய நடிகை சித்ரா பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்துடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார்.

திரைப்படங்கள்

அது போல் பாடகிகள் சின்னக் குயில் சித்ரா உள்ளிட்டோரிடமும் அவர் அறிமுகமாகியுள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜய்யை சந்திக்க வேண்டும் என்ற ஆசை சித்ராவுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்ததாம். அவரது திரைப்படங்களை ஒன்று விடாமல் பார்த்துவிடுவாராம் சித்ரா.

இளமை

இளமை

இந்த நிலையில் விஜய்யை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தும் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லையாம். இதற்கான காரணத்தை நடிகை சித்ராவே கூறியுள்ள வீடியோவை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். தனது திருமணத்திற்கு விஜய்யை அழைக்க வேண்டி இத்தனை நாட்களாக பார்க்காமல் இருந்ததாகவும் அவருக்கு வயதானாலும் அழகும் இளமையும் கூடி கொண்டே போகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் வேதனை

ரசிகர்கள் வேதனை

இந்த வீடியோவை உருக்கமாக பதிவு செய்துள்ள விஜய் ரசிகர்கள் , திருமணத்திற்கு இன்னும் இரண்டே மாதங்கள் இருந்த நிலையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் விஜய்யை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+