சித்ராவின் "அந்த" கடைசி ஆசை.. இறுதிவரை நிறைவேறாமலேயே காற்றில் கரைந்து விட்ட சோகம்!

நடிகை சித்ராவின் கடைசி ஆசை நிறைவேறவே இல்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீடு, பேர், புகழ், என அனைத்தும் சம்பாதித்த சித்ராவுக்கும் ஒரு ஆசை இருந்துள்ளது.. அது கடைசிவரை நிறைவேறாமலும் போயுள்ளது சோகத்திலும் சோகமே!

இந்த 2 நாட்களாக சித்ராவை பற்றி பேசிய பேச்சுக்கள் எல்லாமே ஆச்சரியத்தை தருகின்றன.. 28 வயதில் ஒரு இளம்பெண் இத்தனை நல்ல அம்சங்களை உடையவராக இருந்திருக்க முடியுமா? என்ற வியப்பையும் தருகிறது.

Actress Chitras desire which was not fulfilled till her end

யாரை கேட்டாலும் சித்ரா ஒரு தைரியமான பெண், சித்ரா ஒரு போராளி, சித்ரா கோழை அல்ல, சித்ரா அன்பானவள், சித்ரா உழைப்புக்கு முக்கியம் தருபவர், சித்ரா ஒரு வைராக்கியமான பெண் என்ற பல கருத்துக்கள்தான் முன்வைக்கப்பட்டு வருகின்றன.. அதாவது சித்ரா என்றாலே பாசிட்டிவ் என்று சொல்லும் அளவுக்கு அவரை பற்றின செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

இதுவரை சித்ரா முகத்தில் கவலையோ, ஏக்கமோ பார்த்தது இல்லை.. அர்ப்பணிப்போடு வேலை செய்வாள்.. டான்ஸ், பாட்டு, டிக்டாக் வீடியோ என்று எந்நேரமும் கலகலகவென்று இருக்கும் பெண்ணுக்கு இந்த நிலைமையா என்ற அதிர்ச்சிதான் மேலோங்கி வருகிறது. குட்டி குட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, இன்னைக்கு டிஆர்பியில் உயரத்தில் இருக்கும் அளவுக்கு புகழுடன் விளங்கிய இந்த பெண், வாழ வேண்டிய வயசில் உயிர் போய்விட்டதே என்று கலங்குபவர்களும் அதிகம்!

இந்நிலையில், விஜய் டிவி புகழ் மதுரை முத்து ஒரு பேட்டியில் சித்ராவை பற்றி சொல்லும்போது, "பெண் கலைஞர்கள் தொகுப்பாளராக பெயர் எடுக்குறது ரொம்பவே கஷ்டம்... அவங்க வெளிநிகழ்ச்சிகளில் மேடை ஏறினாலே, பலரின் பார்வையும் பலவிதமா இருக்கும்... ரசிகர்களோடு எடுத்துக்கொள்ளும் ஒரு போட்டோகூட, இந்த சோஷியல் மீடியா காலத்துல பல்வேறு சிக்கல்களை உருவாக்கக்கூடும்.

அதனால், இந்த விஷயத்துல ஆண் கலைஞர்களைவிடவும், பெண் கலைஞர்களுக்குத்தான் அதிக பிரச்சனை. இத்தனையும் தாண்டி இருக்கிறார் சித்ரா. குழந்தைத்தனமா பாசாங்கு இல்லாம எல்லார்கிட்டயும் அன்போடு பழகுவாங்க... விஜய் டிவியில சிறந்த நடிகைக்கான விருது வாங்கறதுதான் சித்ராவின் பெரிய ஆசையா இருந்துச்சு" என்று கலங்கி சொல்கிறார்.

சித்ரா உயிருடன் இருந்திருந்தால், நிச்சயம் இந்த விருதை பெற்றிருப்பார்.. அதற்கான முழு தகுதியும், திறமையும், சித்ராவுக்கு நிறையவே இருந்திருக்கும்.. அந்த ஆசை நிறைவேறாமலேயே சித்ரா உயிர் போயுள்ளது.. ஆனாலும் எந்த விருதுக்கும் அப்பாற்பட்டவர் சித்ரா!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+