விஜயலட்சுமியை தொந்தரவு செய்யமாட்டேன் என.. சீமான் உறுதியளிக்க வேண்டும்.. உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
சென்னை: பிரபல நடிகை கூறிய புகாருக்கு எதிராக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்த வழக்கை, இன்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது. மேல்முறையீடு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற நடிகையின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் இன்றைய தினம் இந்த விசாரணையை நடத்தியிருந்தது. விசாரணையில், நடிகையை தொந்தரவு செய்யமாட்டேன் என சீமான் உறுதியளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, உடலுறவு வைத்துக் கொண்டதாகவும், பிறகு தன்னுடைய கர்ப்பத்தை 7 முறை கலைத்து ஏமாற்றியதாக பிரபல நடிகை, சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நடிகை தந்த புகார்
கடந்த 2011ல் போலீசில் இந்த புகாரை நடிகை தந்திருந்தார்.. இதையடுத்து, இந்திய தண்டனைச் சட்டம் 376வது பிரிவின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கிற்கு எதிராக, சென்னை ஹைகோர்ட்டில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், நடிகை கொடுத்த புகாரின் மீது, 12 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, கடந்த பிப்ரவரி 21ம் தேதி அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.
சீமான் அப்பீல்
இந்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம்கோர்ட்டில் சீமான் அப்பீல் செய்தார். இதை கடந்த மார்ச் மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் இரு தரப்பும் அமர்ந்து பேசி முடிவுக்கு வர அறிவுறுத்தியது. மேலும், அடுத்த விசாரணை நடக்கும் வரை, சீமானுக்கு எதிரான வழக்கின் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
ஆனால், சமரசத்துக்கு தயாராக இல்லை என்று நடிகை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் நடிகை அளித்த பாலியல் புகார் விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான புலன்விசாரணைக்குப் பிடித்த இடைக்காலத் தடையை 4 வாரங்களுக்கு நீடித்து உத்தரவிட்டிருந்தார்.
சுப்ரீம் கோர்ட்
இந்த நிலையில் பாலியல் புகார் வழக்கை ரத்து செய்யக் கோரும் சீமானின் மேல்முறையீடு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று நடிகை கோரிக்கை விடுத்திருந்தார்.. அதன்பிறகு இந்த வழக்கின் விசாரணையும் நடக்கவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கை பட்டியலிட்டு விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்கும்படி, சீமான் தரப்பு வழக்கறிஞர் சுப்ரீம்கோர்ட்டில் கோரிக்கை வைத்தார்.. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், செப்டம்பர் 12ல் வழக்கு பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர். எனவே இன்றைய தினம் சீமான்-நடிகை வழக்கு விசாரணை நடந்தது.
விரைவில் தேர்தல்
விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சீமான் மீது நடிகை தொடரப்பட்ட வழக்கு இந்த வழக்கானது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இந்த வழக்கின் மீது வெளியான உத்தரவு, நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான் அரசியல் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications