தமிழ்நாடு எல்லாம் கொடுக்கும்.. உணர்ச்சிவசப்பட்ட தேவயானி.. மேடையில் கலங்கிய பெண்கள்
சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் மகளிர் உரிமை திட்டம் இரண்டாம் கட்ட விரிவாக்க நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் சாதனை படைத்த பல பெண்கள், திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் நடிகை தேவயானி பேசியதுதான் பயங்கர ஹைலைட். நான் மும்பையில் பிறந்து வளர்ந்தாலும், எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது தமிழ்நாடு தான். தமிழ்நாடு வாழ வைக்கும் பூமி என்று உணர்வுபூர்வமாக பேசினார். அவரின் இந்த பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது".
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளன. அரசியல் கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவி கொண்டிருக்கிறது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கடுமையான முயற்சிகளை செய்து வருகிறது. அரசு ரீதியாக பல திட்டங்களை அறிவிப்பதோடு, அரசியல் ரீதியாக பல்வேறு வியூகங்களை திமுக அமைத்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் மகளிர் உரிமைத் திட்டத்தின் 2வது கட்ட விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

தேவயானி பேச்சு
இதில் நடிகை தேவயானி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "இந்த மேடையில் நிற்பதே தனி மரியாதை., இதை பெருமையான தருணமாக கருதுகிறேன். இந்த வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்த தமிழ்நாடு அரசிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மேடையில் நிற்கும் ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கை கதையும் உத்வேகமளிக்கும் வகையில் உள்ளது. உங்கள் ஒவ்வொருவரின் நம்பிக்கை, செயல்பாட்டிற்கு ஹாட்ஸ் ஆஃப்.
பெண்களின் தன்னம்பிக்கை
நம் பூமி மிகவும்ட அழகானது. மிகவும் பாதுகாப்பான பூமி. பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் பூமியாக உள்ளது. ஒரு பெண்ணாக பிறக்கும்போதே நாம் வெற்றி பெற்றுவிட்டோம். நாம் எல்லோருமே சாதனை படைப்பவர்கள் தான். ஒவ்வொருவரிடமும் அவ்வளவு எனர்ஜி உள்ளது. நமக்கள் அவ்வளவு நம்பிக்கை பொதிந்துள்ளது. தமிழ்நாடு அரசு பெண்களுக்காக எத்தனையோ திட்டங்களை கொண்டு வந்துள்ளனர். இப்போதும் கொண்டு வருகிறார்கள். இனியும் நிறைய கொண்டு வருவார்கள்.
எல்லாம் கொடுத்தது தமிழ்நாடு
அதற்கு அனைத்து பெண்கள் சார்பில் சிரம் தாழ்ந்த நன்றியை கூறிக் கொள்கிறேன். தமிழ்நாடு வாழவைக்கும் பூமி. இங்கு யார் வந்தாலும் அழகாக, அன்பாக குடும்பத்தினரை போல பார்த்துக் கொள்ளாவர்கள். அவர்களுக்கு வேரலை வாய்ப்பு, கல்வி, சுகாதாரம் என எல்லாவற்றையும் கொடுக்கும். நான் பிறந்து வளர்ந்தது மும்பையாக இருந்தாலும் எனக்கு எல்லாமே கிடைத்தது தமிழ்நாட்டில் தான். அதற்கு நாம் எல்லோரும் நன்றி சொல்ல வேண்டும். நான் இங்கு வந்தபோது எனக்கு அழகான வாய்ப்புகள் கொடுத்து பெயர்,. புகழ் கொடுத்தது தமிழ்நாடு தான்.
தமிழ் பூமி
இன்றைக்கு நான் என்னவாக இருக்கிறேனோ அது எல்லாமே இந்த தமிழ் பூமி கொடுத்தது. இங்கு எல்லாரும் ஒன்று தான். கஷ்டம் வரும். அதுவே நிரந்தரம் இல்லை. எனவே பயப்பட வேண்டாம். எதுவும் கடந்து போகும். மகிழ்ச்சியாக இருப்போம். பாசிட்டிவாக இருப்போம். அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார். அப் பாது மேடையில் நின்ற பெண்களின் கைகளை குலுக்கி தன் அன்பை வெளிப்படுத்தினார். தேவயானி பேசும் போது அரங்கத்தில் கைத்தட்டல், விசில் அதிர வைத்தது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications