கவுதமி கடும் ஏமாற்றம்.. பாஜக அழுத்தத்திற்கு அசராத அதிமுக.. ராஜபாளையத்தில் ராஜேந்திர பாலாஜி
சென்னை: ராஜபாளையம் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கவுதமி போட்டியிடுவார் என்று தீவிர எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அந்த தொகுதியில் அதிமுக போட்டியிடுகிறது.
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இன்று அதிமுக வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியல் வெளியானது. மேலும், பாஜகவில் 20 தொகுதிகள் எவை எவை என்பது பற்றியும் பட்டியல் வெளியானது.

இதில் முக்கியமாக கவனிக்கத் தக்கதாக இருப்பது ராஜபாளையம் தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதுதான். கடந்த சில வாரங்களாக கவுதமி அவ்வப்போது ராஜபாளையம் பகுதிக்குச் சென்று முகாமிட்டு இருந்தார். பாஜகவினர் தொகுதி பொறுப்பாளராக இருந்தார்.
ஜாதி சார்ந்த வாக்குகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதன் பின்னணியில் இருந்ததாக கூறப்பட்டது. அதிமுக தலைமைக்கு பாஜகவில் இருந்து கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு அந்த தொகுதி வேண்டும் என்று கேட்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சிவகாசி தொகுதியில் இருந்து மாறி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருந்தார். எனவே அவர் இதை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்று கூறப்பட்டது.
இப்படியாக கடும் இழுபறி நிலையில் ராஜேந்திர பாலாஜிக்கு ராஜபாளையம் தொகுதி கிடைத்துள்ளது. இதனால், கவுதமி ஏமாற்றம் அடைந்துள்ளார்.
பாஜக போட்டியிடும் பட்டியலை பாருங்கள்:
- திருவண்ணாமலை (63)
- நாகர்கோவில் (230)
- குளச்சல் (231)
- விளவன்கோடு (233)
- ராமநாதபுரம் (211)
- மொடக்குறிச்சி (100)
- துறைமுகம் (18)
- ஆயிரம்விளக்கு (20)
- திருக்கோயிலூர் (76)
- திட்டக்குடி (தனி) (151)
- கோயம்புத்தூர் தெற்கு (120)
- விருதுநகர் (206)
- அரவக்குறிச்சி (134)
- திருவையாறு (173)
- உதகமண்டலம் (108)
- திருநெல்வேலி (224)
- தளி (56) -
- காரைக்குடி (184)
- தாராபுரம் (தனி) (101)
- மதுரை வடக்கு (191)
-
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்?












Click it and Unblock the Notifications