பாஜகவில் இருந்து விலகிய.. நடிகை கவுதமி அதிமுகவில் இணைந்தார்.. வரவேற்ற எடப்பாடி பழனிச்சாமி!
சென்னை: பாஜகவில் இருந்து கடந்த ஆண்டு விலகிய நடிகை கவுதமி அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அவர் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார்.
நடிகையாக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர் நடிகை கவுதமி. 1997ம் ஆண்டு பாஜகவில் இணைந்த இவர் அந்த கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தார். பாஜகவின் இளைஞர் அணி துணை தலைவராக பணியாற்றினார்.

மேலும் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாட்டில் தேர்தல் நேரங்களில் பாஜக தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வந்தார். அதன்பிறகு சிறிது காலம் ஓய்வில் இருந்த கவுதமி மீண்டும் பாஜகவில் தீவிரமாக செயல்பட தொடங்கினார். 2021ம் ஆண்டில் விருதுநகர் மாவட்டம் அவர் ராஜபாளையம் சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
அதோடு அந்த சட்டசபை தொகுதியில் அவர் போட்டியிட விரும்பினார். ஆனால் நடிகை கவுதமிக்கு ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கவில்லை. இதையடுத்து அவர் கடும் அதிருப்தியடைந்தார். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு அவர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
மேலும் கட்சியில் இருந்து விலகுவதற்கான காரணத்தை அவர் அறிக்கையாக வெளியிட்டார். அதில், ‛‛ 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் பாஜகவில் சேர்ந்தேன். என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட அனைத்து சவால்களிலும் நான் உறுதியாக இருந்தேன். ஆனால் இன்று நெருக்கடியை சந்திக்கிறேன். கட்சி மற்றும் தலைவர்களிடமிருந்து எனக்கு எந்த ஆதரவும் இல்லை. மேலும் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்து என் வாழ்நாள் சம்பாத்தியத்தை ஏமாற்றியவன் ஒருவனுக்கு கட்சியில் பலர் தீவிரமாக உதவுகிறார்கள்.
2021 சட்டசபை தேர்தலின்போது, ராஜபாளையம் தொகுதியின் வளர்ச்சியை உறுதி செய்ய பாடுபட்டேன். பாஜக சார்பாக தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தேன். ராஜபாளையம் மக்களுக்காகவும், அடிமட்ட அளவில் பாஜகவை வலுப்படுத்துவதற்காகவும் என்னை அர்ப்பணித்து பணியாற்றினேன். எனினும், கடைசி நிமிடத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இருப்பினும் கட்சிக்கு தொடர்ந்து விசுவாசமாக இருந்தேன். ஆனால் என்னிடம் மோசடி செய்த விவகாரத்தில் எனக்கு ஆதரவு தெரிவிக்காமல் மோசடி நபருக்கு கட்சியினர் உதவுவதை பார்த்து கணத்த இதயத்துடன் பாஜகவில் இருந்து விலகுகிறேன்'' என தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து வேறு கட்சியில் அவர் இணையாமல் இருந்தார். இந்நிலையில் தான் நடிகை கவுதமி இன்று அதிமுகவில் இணைந்தார். சென்னை பசுமை வழி சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து நடிகை கவுதமி இன்று அதிமுகவில் இணைந்தார்.
சமீபகாலமாக பாஜகவில் இருந்து விலகும் பிரபலங்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம், எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். காயத்ரி ரகுராமும் பாஜகவில் இருந்து விலகி தான் அதிமுகவில் இணைந்தார். அந்த வரிசையில் நடிகை கவுதமியும் பாஜகவில் இருந்து விலகி இருந்த நிலையில் இப்போது அதிமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ்












Click it and Unblock the Notifications