"பிரபல நடிகை".. திமுக பக்கம் சாய்கிறாரே.. ஆளுநருக்கே பதிலடி தந்து.. சூழ்கிறதா மேகங்கள்.. இது எப்போ?
சென்னை: திராவிடம் என்பது வெறுக்க முடியாதது, அது காலாவதியாகவில்லை என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளது.. திமுகவுக்கு ஆதரவு தந்து பதிவிட்டுள்ள இந்த ட்வீட்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
தமிழக அரசுக்கும், தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கும் பல்வேறு தருணங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.. இப்போதும் அப்படி தர்மசங்கடம் சூழ்ந்துள்ளது..

ஒரே பாரதம்: திமுக அரசின் திராவிட மாடல் கொள்கையை, தன்னுடைய ஒரு பேட்டியில் கடுமையாக சாடியிருக்கிறார் ஆளுநர் ரவி.. திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம். காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி. திராவிட மாடல் என்பது நமது ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானது என்று தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
சுத்த பொய்: ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி எல்லை தாண்டி செயல்படுகிறார் என்று திமுக அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யான குற்றச்சாட்டு. அது முழுக்க முழுக்க அபத்தமானது. ஆளுநருக்கு என்று ஒரே ஒரு எல்லை தான் இருக்கிறது. அந்த எல்லை என்பது அரசியல் சாசனத்தால் வகுக்கப்பட்டது என்பது முதல் பல்வேறு விஷயங்களை அந்த பேட்டியில் ஆளுநர் பதிவு செய்துள்ளார்..
இது தமிழகத்தில் ஒருசாரார் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.. திராவிட மாடல் என்பது இந்தியா முழுவதும் பல்வேறு மாநில அரசுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.. இப்படிப்பட்ட சூழலில், பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நடிகை காயத்ரி ரகுராமும், திராவிடம் குறித்து ஆதரவாக தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மதராசி - பெருமை: "திராவிடம் என்ற வார்த்தை தேசிய கீதத்தில் உள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ளது... திராவிடம் வெறுக்க முடியாது. அது காலாவதியாகவில்லை. எங்களை தென்னிந்தியர்கள் என்று அழைப்பதற்குப் பதிலாக, எங்களை மதராசி என்று அழைப்பதற்குப் பதிலாக, நான் எப்போதும் திராவிடர் என்று அழைக்கப்பட விரும்புகிறேன்... நிச்சயமாக நான் தமிழனாக பெருமை கொள்கிறேன். இந்தியனாகவும் அழைக்க பெருமை கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
திராவிடம் என்பது வெறுக்க முடியாதது. அது காலாவதியாகவில்லை, என்று ஆளுநர் ரவிக்கு நடிகை காயத்ரி ரகுராம் பதில் அளித்துள்ள நிலையில், இந்த ட்வீட்டினை திமுகவினரே ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.. கடந்த சில மாதங்களாகவே, காயத்ரி ரகுராம் திமுகவில் இணைய போவதாக செய்திகள் உலா வருகின்றன..
இதை ஒருமுறை அவரே வெளிப்படையாக கூறியிருந்தார்.. தன்னை அழைத்தால் திமுக அல்லது விசிகவில் இணைய தயார் என்றும் அறிவித்திருந்தார்.. ஆனால், இதுவரை எந்த கட்சியிலும் இணையவில்லை. அதேசமயம், திமுக, விசிகவுக்கான தன்னுடைய ஆதரவை, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் காயத்ரி பதிவு செய்து கொண்டுமிருக்கிறார்..

உற்றுகவனிப்பு: ஒருமுறை அமைச்சர் பொன்முடியிடம் செய்தியாளர்கள், காயத்ரி ரகுராம் திமுகவில் இணைய விரும்பினால் இணைத்துக் கொள்வீர்களா என்று கேட்டனர்..
அதற்கு அமைச்சர், "பெரியார், அண்ணாவின் கொள்கைகளை ஏற்று பின்பற்றி யார் திமுகவிற்கு வந்தாலும் அவர்கள் தாராளமாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். காயத்ரி ரகுராமுக்கும் அதேதான்... எங்கள் கொள்கைகளை பின்பற்றுவோரை திமுக தலைமை ஏற்றுக்கொள்ளும். எங்கள் முதல்வரும் ஏற்றுக்கொள்வார்" என்று கூறினார்.. இப்படிப்பட்ட சூழலில், திராவிடம் குறித்த தற்போதைய காயத்ரியின் ஆதரவானது, திமுக, விசிக இடையே கவனம் பெற்றுள்ளது.. அத்துடன், பாஜகவும் அதை உற்றுகவனித்து வருகிறது..!!
-
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
5 தொகுதிகள் ஒதுக்கும் திமுக.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு என்ன? 6 மணி நேரமாக நடந்த ஆலோசனை -
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
திருவாடானை தொகுதியில் களமிறங்கும் திமுக? MLA சீட் ரேஸில் யார்? -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications