நடிகர் ஹரி வைரவனுக்கு சிறுநீரக செயலிழப்புக்கு சிகிச்சை.. விரைவில் நடிக்க வைப்பதாக மனைவி நம்பிக்கை
சென்னை: வெண்ணிலா கபடி குழு நடிகர் ஹரி வைரவனுக்கு நிறைய பேர் உதவி செய்து வரும் நிலையில் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள்.
வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் நடித்த ஹரி வைரவனுக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்து, கை, கால், முகம் எல்லாம் வீங்கி நடக்கவே முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். இது குறித்து செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் அவருடன் நடித்த நடிகர்களும் ரசிகர்களும் அவருக்கு உதவி செய்ய முன் வந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நடிகர் ஹரிவைரவன்
இதுகுறித்து நடிகர் ஹரி வைரவனின் மனைவி கவிதா தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், நடிகர் வைரவனை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அங்கு அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வைரவனின் நிலை குறித்து செய்திகளும் வீடியோக்களும் வெளியானதை அடுத்து உதவிகள் வந்து குவிகின்றன.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி, சூரி, விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் எங்களுக்கு பண உதவி செய்துள்ளார்கள். இது போக இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் எங்களை தொடர்பு கொண்டு உதவி செய்கிறார்கள். எனக்கு இப்போது புது நம்பிக்கையும் தெம்பும் பிறந்தது போல் உள்ளது.

வைரவனின் முகம், கை, கால்களில் வீக்கம்
வைரவனின் முகம், கை, கால்களில் உள்ள வீக்கத்தை முதலில் குறைப்பதாக மருத்துவர் கூறியுள்ளார். வைரவனை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும் என்றும் கூறியுள்ளார்கள். அவரை சினிமாவில் மீண்டும் நடிக்க வைப்பேன். அவருக்கு மருந்து, மாத்திரை எல்லாம் கிடையாது. மசாஜ், உடற்பயிற்சி உள்ளிட்டவை கொண்டு சிகிச்சை அளிக்கிறார்கள். இதனால் எந்த பக்க விளைவுகளும் இருக்காது என்பதால் இந்த சிகிச்சையை நாங்கள் தேர்வு செய்துள்ளோம்.

விரைவில் குணமடையும் வைரவன்
விரைவில் வைரவனை சரி செய்வோம் என மருத்துவர் கூறியுள்ளார். உடலில் உள்ள நீரை நீக்கிவிட்டு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரி செய்வதாக கூறியுள்ளார்கள். முதலில் வைரவனை நடக்க வைக்க சிகிச்சை அளிக்கிறார்கள். இவையெல்லாம் சரி செய்துவிட்டாலே சிறுநீரகம் தானாக செயல்பட தொடங்கிவிடும். ஒரு மாதத்திற்கு மருத்துவமனையில் தங்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் உணவையே சாப்பிட வேண்டும்.

மருத்துவர் பரிந்துரைத்த உணவு
வீட்டுக்கு போன பிறகும் மருத்துவர் பரிந்துரைத்த உணவையே உட்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்கள். எனவே எனது கணவரின் சிகிச்சைக்கு உதவிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றி. எனது கணவர் நடிகர் என்பதால் அதற்கான பலன் வேகமாக கிடைக்கிறது. ஆனால் என் கணவரை போல் எத்தனையோ பேர் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கும் உதவிகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன் என்றார் கவிதா.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications