Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பெட்ரூம் பத்தியே பேசுற? உடம்பெல்லாம் புளுகு.. நடிகைகள்ன்னா".. பயில்வானை பார்த்ததுமே பாய்ந்த கே.ராஜன்

பயில்வான் ரங்கநாதன் மற்றும் கே.ராஜன் வார்த்தை மோதலில் ஈடுபட்டு கொண்டார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பயில்வான் ரங்கநாதனும், தயாரிப்பாளர் கே.ராஜனும் நேருக்கு நேர் வார்த்தைகளால் மோதிக் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி கொண்டிருக்கிறது. மற்றொருபுறம், தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையை பற்றி, பொதுவெளியில் பேசுவது சரியா? என்ற விவாதங்களும் இணையத்தில் எழுந்து வருகின்றன.

பயில்வான் ரங்கநாதன், நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை யூடியூப் சேனல்களில் பகிரங்கப்படுத்தி வருகிறார்..

இவர் சொல்லும் கிசு கிசு தகவல்களை பெறுவதற்காக, ஏகப்பட்ட யூடியூப் சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு இவரை பேட்டி எடுத்து வருகின்றன..

பயில்வான்

பயில்வான்

அதற்காக ஒரு கணிசமான தொகையை கொடுக்கவும் தயாராக இருக்கின்றன.. ஆனால், பத்திரிகையாளர் என்ற முறையிலும் இல்லாமல், சீனியர் நடிகர் என்ற முறையிலும் இல்லாமல், வயதில் பெரியவர் என்ற முறையிலும் இல்லாமல், ஒருவரின் அந்தரங்க விஷயத்தை, அவர்களின் அனுமதி இல்லாமல் பொதுவெளியில் பேசிவருவது பலரையும் தொடர்ந்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.. அந்த வகையில் தயாரிப்பாளரும், தமிழக மக்கள் இயக்க தலைவருமான கே.ராஜன், பயில்வான் ரங்கநாதன் மீது கமிஷனர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் தந்திருந்தார்..

 கழட்டி அடிச்சாங்க

கழட்டி அடிச்சாங்க

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.ராஜன், "நடிகர்கள், நடிகைகளுக்கும் எதிராக ரகசியங்களை வெளியிடுகிறேன் என்று சொல்லி பொய்யான செய்திகளை பயில்வான் ரங்கநாதன் ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசி வருகிறார்.. பயில்வான் ரங்கநாதனை ராதிகா சரத்குமார் காலில் இருந்ததை கழட்டி அடிச்சிருக்காங்க. அதன் பிறகும் பணத்திற்காக தொடர்ந்து இந்த செயலை செய்து வருகிறார். நடிகர், நடிகைகள் மிகவும் வேதனையுடன் மன உளைச்சலில் கஷ்டப்படுகிறார்கள்.

நடிகைகள்

நடிகைகள்

ஆனால் பயில்வான் ரங்கநாதன் "என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது, என்னை யாராவது தாக்க வந்தால் அரிவாளால் அவர்களின் கழுத்தை அறுத்து விடுவேன், நான் தூத்துக்குடிக்காரன்" என எல்லா பெண்களையும், அச்சுறுத்தி இருக்கிறார். அதனால் பாதிக்கப்பட்ட நடிகர், நடிகைகள் அவர் மீது புகார் அளிக்க அஞ்சுகிறார்கள். இதனால் அவரின் பேச்சும் செயலும் வன்முறையை தூண்டி சட்டம் ஒழுங்கை பாதிக்கச் செய்வதால், பயில்வான் ரங்கநாதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறியிருந்தார்.

 கட்சிக்காரன்

கட்சிக்காரன்

கே.ராஜனின் இந்த புகாருக்கு பயில்வான் ரங்கநாதன் மறுப்பு கூறியிருந்தார்.. "நடிகைகள் நிர்வாணமாக நடிக்கிறாங்க . அது அவங்க உரிமை. அத பற்றி பேசுவது என்னுடைய உரிமை.. சினிமாவில் உள்ள அழுக்குகளையும், சாக்கடைகளையும் நீக்க வேண்டும் என்பதற்காகத்தான் பேசி வருகிறேன்" என்று பதிலளித்திருந்தார். இந்நிலையில், நேற்றைய தினம் கட்சிக்காரன் பட நிகழ்ச்சியில், கே.ராஜன், பயில்வான் ரங்கநாதன் இருவருமே கலந்து கொண்டனர்.. மேடையில் கே ராஜன் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென குறுக்கே வந்த பயில்வான் ரங்கநாதன், வார்த்தை மோதலில் ஈடுபட்டார்..

 பெட்ரூம்

பெட்ரூம்

அதற்கு கே.ராஜன், "உனக்கு பதில் சொல்ல இங்கே நான் வரவில்லை.. அதற்கான இடம் இது கிடையாது.. நாம தனியாக விவாதம் வைத்து கொள்ளலாம்.. பெண்களை தவறாக பேசுவது யார் என்று விவாதம் வைப்போம்.. நான் எப்போது பெண்களை தவறாக பேசினேன்? ஒவ்வொரு தாய்மார்களையும், நடிகைகளையும் கேவலப்படுத்தி பேசுவது நீதான்.. பெட்ரூமை பற்றியே பேசுறியே.. அசிங்கப்படுத்துவியா? எச்சக்கல.. இந்த மேடை தயாரிப்பாளர் போட்ட மேடை. எல்லாமே ஓசிக்கு வேண்டாம். உன்னையப் பத்தி எப்போ பேசினேன்? நீ ஒவ்வொரு தாய்மார்களையும் கேவலப்படுத்திட்டு இருக்க" என்று ஆவேசமாக பேசினார் கே.ராஜன்.. உடனே அங்கிருந்த ஒரு தரப்பினர் கே.ராஜனையும், மற்றொரு தரப்பினர் பயில்வானையும் சமாதானப்படுத்தினர்..

புளுகன்

புளுகன்

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் வெளியே வந்த கே.ராஜனிடம் செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்விகளை கேட்டனர்.. "பயில்வான் ரங்கநாதனை நீ, வா என்று நீங்கள் பேசலாமா? பெண்களை அட்ஜஸ்மென்ட்டுக்கு அழைக்கிறார்கள் என்று நீங்கள்தான் சொன்னீர்களாமே? அதைதான் பயில்வான் உங்களிடம் கேட்கிறார்" என்று கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கு கே.ராஜன், தம்பி என்ற உரிமையில் அப்படி அவரை கூப்பிட்டேன்.. கண்டித்தேன்.. மற்றபடி அவர் சொல்வது எல்லாமே பொய்.. அவர் ஒரு பொய்யன்.. புளுகன்.. உடம்பெல்லாம் புளுகு.. ஆயிரம் பொய்களை பயில்வான் சொல்வார்.. அதுக்கு நான் பொறுப்பாக முடியாது.. பெண்களை தவறாக பேசிவருவது பயில்வான்தான்" என்றார்.

 படுக்கையறை

படுக்கையறை

"நீ யார் இன்னொருத்தர் படுக்கையறையை எட்டிப்பார்க்க? நீ யார் அவர்களின் அந்தரங்கங்களை பொதுவெளியில் பேசுவதற்கு?" தயாரிப்பாளர் கே.ராஜன் 4 மாதங்களுக்கு முன்பு எச்சரித்திருந்தார்.. பிறகு, கே.ராஜன் மற்றும் இயக்குநர் திருமலை ஆகியோர் பயில்வான் ரங்கநாதன் மீது ஸ்டேஷனில் புகார் அளித்திருந்தனர்.. இவர்களை தொடர்ந்து பின்னணி பாடகி சுசித்ராவும் போலீசில் புகார் தந்திருந்ததால், பயில்வான் ரங்கநாதனுக்கு பிடி இறுகி வருவதாக தகவல்கள் அப்போது வெளியாகின.. ஆனால், அதுகுறித்த நடவடிக்கை என்ன ஆனது என்று தெரியவில்லை.

 மலிவு ரசனை

மலிவு ரசனை

என்றாலும், "நடிகர், நடிகைகளை பற்றி நான் சொல்வதை கேட்பதற்காகவே 3 லட்சம் பேர் இருக்கிறார்கள்.. அதனால் தொடர்ந்து பேசுங்கள் என்று பொதுமக்கள் முதல் காவல் துறை அதிகாரிகள் வரை பலரும் என்னிடம் கேட்கிறார்கள்.. தமிழ் சினிமாவில் எம்ஜிஆரை தவிர யாரும் யோக்கியர் கிடையாது.. நான் யாரை பற்றியும் ஆபாசமாக பேசவில்லை. சட்டத்திற்கு உட்பட்டே பேசுகிறேன்" என்று பயில்வான் தொடர்ந்து தன்னிலை விளக்கம் தந்து வருகிறார்.. அதேசமயம், பாடகி சுசித்ரா கொந்தளித்ததுபோல், சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் இதுவரை கொந்தளிக்கவில்லை.. பயில்வானை நேரடியாகவும் கண்டிக்கவும் இல்லை.. இதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை.

 ரசனைவாதிகள்

ரசனைவாதிகள்

ஆனால், இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வராமல், தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது.. இப்போதும் இதே பிரச்சனை வெடித்து கிளம்பி உள்ளது.. சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், இதற்கெல்லாம் காரணம், மக்களின் ரசனைகள் மலிந்து கிடப்பதுதான் என்பதையும் மறுத்துவிட முடியாது.. பயில்வான் போடும் வீடியோக்களை பலரும் ரசித்து பார்க்கிறார்கள்.. ஆதரவு தருகிறார்கள்.. மற்றொரு பக்கம் பயில்வானையும் திட்டுகிறார்கள்.. ஆக, பயில்வானை ஊக்கப்படுத்துவதே, மலிவு ரசனைவாதிகள்தான் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+