நான் என் வண்டிலதான் வருவேன்.. கைது பண்ற அளவுக்கு நான் எந்த தவறும் செய்யலை.. நடிகை ஜெயலட்சுமி அடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமியை போலீஸார் வாகனத்தில் ஏற்றிய போது மறுப்பு தெரிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சின்னத்திரை சீரியல் நடிகை ஜெயலட்சுமி. இவர் ஒரு வழக்கறிஞரும் கூட! கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்திருந்தார். அதில் தனது வாட்ஸ் அப் எண்ணுக்கு அறிமுகம் இல்லாத நபர்கள் ஆபாச தகவல்களை அனுப்புவதாகவும் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்களுடன் டேட்டிங் சென்றால் ரூ 30 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை வருமானம் கிடைக்கும் என அழைப்பதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.

 Actress Jayalakshmi refuses to come in Police van

இதைத் தொடர்ந்து அவர் பாஜகவில் இணைந்து மாநில மகளிர் அணியில் நிர்வாகியாக இருந்து வருகிறார். பாஜகவின் வெற்றிக்காக தொடர்ந்து பிரச்சாரங்களை செய்து வருகிறார். அவர் கடந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் 90 ஆவது வார்டில் பாஜக சார்பில் களமிறங்கினார். ஆனால் தோல்வியை தழுவினார்.

இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு சினேகம் அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக பாடலாசிரியர் சினேகன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகாரை அளித்திருந்தார். இதை மறுத்த ஜெயலட்சுமி, " அந்த புகாரில் உண்மை இல்லை, இந்த அறக்கட்டளை எனக்கு சொந்தமானது. இதன் மூலம் நான் என் சொந்த பணத்தில் ஏழை குழந்தைகளுக்கு உதவி வருகிறேன்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சினேகன் தீர விசாரிக்காமல் என் பெயருக்கு களங்கம் கற்பிக்க முயற்சிக்கிறார்" என சினேகன் மீது புகார் அளித்திருந்தார். இருவரும் மாறி மாறி புகார்களை அளித்து கொண்ட நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவின்படி திருமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்றைய தினம் சென்னை அண்ணாநகரில் ஜெயலட்சுமிக்கு சொந்தமான வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அறக்கட்டளை தொடர்பான ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜெயலட்சுமியை போலீஸார் கைது செய்வதாக கூறினர்.

இதற்கு ஜெயலட்சுமி எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினரையும் முதல்வரையும் திருப்திப்படுத்த எந்த தவறுமே செய்யாத என்னை போலீஸார் கைது செய்கிறார்கள் என ஆவேசமடைந்தார். இதையடுத்து போலீஸ் வாகனத்தில் அவரை ஏற்ற முயற்சித்த போது நான் என் காரில்தான் வருவேன் என அடம்பிடித்தார்.

போலீஸார் மறுத்த நிலையில் போலீஸ் வண்டியில் என்னை அழைத்து செல்லும் அளவுக்கு நான் எந்த தவறு எதுவும் செய்யவில்லை. எனவே என் வண்டியில்தான் வருவேன். நான் தப்ப மாட்டேன். என் பின்னால் போலீஸ் வாகனம் வரட்டும். இல்லை என்றால் என்னுடனேயே என் வண்டியில் கூட அவர்கள் வரட்டும். குற்றவாளிகளை கைது செய்யாமல் என்னை போன்ற அப்பாவிகளை ஏன்ங்க கைது செய்கிறீர்கள் என சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

இதையடுத்து ஒரு வழியாக ஜெயலட்சுமியை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவரை மார்ச் 4-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் ஜாமீன் கோரி மனுவை தாக்கல் செய்வாரா என தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+