என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.. உங்க அடுத்த இலக்கு மகள் ரேத்வாவா.. ஜெயஸ்ரீயின் அதிர வைக்கும் கடிதம்
Recommended Video
சென்னை: என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. உங்கள் அடுத்த இலக்கு மகள் ரேத்வாதானா என தனது தற்கொலை முயற்சி கடிதத்தில் நடிகை ஜெயஸ்ரீ, கணவர் ஈஸ்வரிடம் கேட்டுள்ளார்.
தனது தற்கொலை முயற்சி கடிதத்தில் ஈஸ்வருக்கு அறிவுரைகளையும் தனது ஏமாற்றத்தையும் ஜெயஸ்ரீ கூறியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறுகையில் ஈஸ்வர், நீங்கள் உங்கள் பெற்றோர் மற்றும் வழக்கறிஞரின் துணையுடன் இத்தனை துன்பங்களை எனக்கு கொடுத்தீர்கள்.
எனக்கும், எனது மகளுக்கும் நீங்கள் துரோகம் செய்வீர்கள் என ஒரு போதும் நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் எங்களை உண்மையாக விரும்பினீர்கள் என நினைத்தேன். ஆனால் பொய்யான நம்பிக்கைகளை எங்களுக்கு ஏன் அளித்தீர்கள் ஈஸ்வர்?

நினைத்ததில்லை
கடந்த 2013-ஆம் ஆண்டு நீங்கள் தான் என்னை தேடி வந்து திருமணம் செய்து கொள்வதாக கூறினீர்கள். எனது வாழ்வில் துணையாக இருந்தீர்கள். என் மகள் அப்பா என அழைக்கும் படி அவளை பார்த்துக் கொள்ளுங்கள். இது போன்று என் வாழ்வில் மாற்றம் வரும் என ஒரு போதும் நான் நினைத்ததில்லை ஈஸ்வர்.

சிந்திக்கவில்லை
நாம் வாழ்ந்த காலங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆசைகளை பற்றி மட்டுமே நினைத்தீர்கள். என்னையும் என் குழந்தையையும் பற்றி ஒரு நொடி கூட சிந்திக்கவில்லை. என்னை ஆள் வைத்து கொல்லும் நிலைக்கு நீங்கள் சென்றுவிட்டீர்கள். கடவுளே ஈஸ்வர் இப்படி செய்வார் என நம்பமுடியவில்லை.

ரூ 2 கோடி வீடு
இன்று நான் உங்களுக்கு மதிப்பில்லாதவளாகிவிட்டேன். பால், மளிகை பொருட்கள், துணி அயர்னிங், இன்டர்நெட் கனெக்ஷன் ஆகியவற்றுக்கு பணம் செலுத்துவதை நிறுத்திவிட்டீர்கள். ஆனால் நீங்கள் சூதாடியதால் ஏற்பட்ட லட்சக்கணக்கான கடனை நான்தான் அடைத்தேன். அது போதாததற்கு இந்த வீட்டை ரூ 2 கோடிக்கு நான்தான் வாங்கினேன்.

மறந்துவிட்டீர்கள்
மேலும் உங்கள் தினசரி செலவிற்கும் பணம் கொடுத்துள்ளேன். ஆனால் இன்று அதையெல்லாம் மறந்துவிட்டீர்கள். எனக்கும் எனது மகளுக்கும் அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய உங்களுக்கு மனம் வரவில்லை. அடிப்படைத் தேவைகளுக்கான கடனை கூட என்னால் திருப்பித் தர முடியாத நிலையில் உள்ளேன். எனக்கு இப்போது பணிக்கான வாய்ப்புகள் இல்லாததால் என்னால் இவற்றை திருப்பி செலுத்த முடியாது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

இதுதான் கைமாறா
என்னை ஏமாற்றவே மாட்டேன் என எனக்கு வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால் ஈஎம்ஐயை செலுத்தாததிலிருந்து அனைத்தும் தொடங்கிவிட்டது. என்னை கெட்ட கெட்ட வார்த்தைகளால் அழைத்தீர்கள். இதுதான் எனக்கு நீங்கள் செய்யும் கைமாறா? இப்படித்தான் மனைவியையும் மகளையும் ஏமாற்றுவதா?

ஜீரணிக்கவே முடியவில்லை
இதயமே இல்லாமலும் தந்திரமாகவும் நீங்கள் செயல்பட்டதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. உங்களுடைய அடுத்த இலக்கு மகள் ரேத்வாவா என எனக்கு தெரியவில்லை. உங்கள் காலை பிடித்து கேட்கிறேன். அவளை நிம்மதியாக வாழ விடுங்கள். என் ஏழை தாயிடம் அவள் நிம்மதியாக வாழட்டும். உங்களுக்கு என் உயிர் தானே வேண்டும். எடுத்துக் கொள்ளுங்கள்.

விசுவாசம்
இதுதான் தற்போது மிஞ்சியுள்ளது. உங்களுடைய கஷ்டமான காலங்களில் நான் உடனிருந்ததற்கு உங்களுக்கு விசுவாசமாகவும் ஆதரவாகவும் இருந்ததற்கு இதுதான் உள்ளது. ஆனால் என் மகளை விட்டுவிடுங்கள் என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஜெயஸ்ரீ, இந்த உலகில் சிறந்த மாமியார், மாமனாராக நடித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications