சிவசங்கர் பாபாவை தூக்கிலிடுங்கள்.. ட்விட்டரில் கோபத்தை கொப்பளித்த பிக்பாஸ் நடிகை!
சென்னை: சிவசங்கர் பாபாவை தூக்கிலிடுங்கள் என நடிகை காஜல் பசுபதி ட்விட்டரில் கொந்தளித்துள்ளார்.
Recommended Video
அண்மைக்காலமாக சில பள்ளிகளில் பாலியல் சீண்டல்கள் நடத்தப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. அந்த வகையில் இன்று பரபரப்பாக பேசப்பட்டு வருவது சுஷில் ஹரி சர்வதேச பள்ளியில் நடைபெறும் பாலியல் சீண்டல்கள்.
காரணம் மற்ற பள்ளிகளில் யாரோ ஒரு ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருப்பார். அவர் மீது நிர்வாக ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் சுஷில் ஹரி பள்ளியை பொருத்தமட்டில் ஒரு நிறுவனரே இது போன்ற பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆசிரியர்கள் மீது வழக்கு
இந்த நிலையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அது போல் அவருக்கு உடந்தையாக இருந்ததாக ஆசிரியைகள் இருவர் மீதும் போக்சோ சட்டம் பாய்ந்தது. இதனிடையே சிவசங்கர் பாபா காசியாபாத்தில் கைது செய்யப்பட்டார்.

டெல்லி
அவர் நேற்று இரவு டெல்லியிலிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். இதனிடையே சிவசங்கர் பாபாவுக்கு ஆதரவாக விருமாண்டி பட நடிகர் சண்முகராஜா பேசியிருந்தார். அதில் சிவசங்கர் பாபா பெண்கள் மீது நாட்டமற்றவர் என்றும் அவர் ஒரு சித்தர் என்றும் பேசியிருந்தார்.

டிவிட்டர்
இவரது பேட்டி சமூகவலைதளங்களில் வைரலானது. பலர் சண்முகராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் சிவசங்கர் பாபாவை தூக்கிலிட வேண்டும் என நடிகை காஜல் பசுபதி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ரேபிஸ்ட் பாபா குறித்து வீடியோ ஒன்றை டிவிட்டரில் அப்லோடு செய்ய முடியவில்லை.

மாற்றுச் சான்றிதழ்
எனக்கு ஏன் இந்த அப்லோடு பிரச்சினை ஏற்பட்டுள்ளது என ட்விட்டர்வாசிகளை கேட்டு விளாசியுள்ளார். இந்த நிலையில் குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி சுஷில் ஹரி பள்ளியில் படிக்கும் தங்கள் பிள்ளைகள் வேறு பள்ளியில் சேர்க்க முடிவு செய்துள்ளார்கள். பலர் மாற்றுச் சான்றிதழை வாங்கி வருகிறார்கள் என தகவல்கள் வருகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications