நடிகை கனகா வீட்டில் சோகம்.. ஒரே உறவும் கைவிட்டாச்சு! ஒருமுறை யோசித்திருக்கலாம்!
சென்னை: தமிழ் திரையுலகில் கரகாட்டக்காரன் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை கனகா. இவரது தந்தை தேவதாஸ் கடந்த சில நாட்களாக உடல்நல பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார். தேவதாஸ் ஜனாதிபதி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1989ம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் கரகாட்டக்காரன். இந்த படத்தின் மூலம் அறிமுகமான கனகா அடுத்தடுத்து பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தார். இவரது நடிப்பின் உச்சமாக கடந்த 1991ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான காட்பாதர் என்கிற திரைப்படம் அமைந்தது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் 400 நாட்கள் ஓடி இருந்தது.

என்னதான் திரைத் துறையில் கனகா கொடி கட்டி பறந்தாலும் கூட சொந்த வாழ்க்கையில் அவருக்கு மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
இவரது தாய் தேவிகா எம்ஜிஆர் காலத்து நடிகை. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். இவர் ஜனாதிபதி விருது பெற்ற இயக்குனரான தேவதாஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தேவதாஸ் இயக்கிய வெகுளி பெண் எனும் திரைப்படம், மத்திய அரசின் ஜனாதிபதி விருதை இவருக்கு பெற்று கொடுத்தது. தேவதாஸும், தேவிகாவும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டாலும் இருவரும் நீண்ட காலம் சேர்ந்து வாழவில்லை. 1990ல் இவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர்.
அதன் பின்னர் சில ஆண்டுகளில் அதாவது 2002ல் தாய் தேவிகா உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அப்போது முதல் கனகா தனிமையிலே வசித்து வந்திருந்தார்.
தனியார் ஊடகத்திற்கு சமீபத்தில் இது தொடர்பாக பேட்டி அளித்திருந்த கனகாவின் தந்தை தேவதாஸ், கனகா நடிப்பதைதான் விரும்புவதில்லை என்றும் இப்பொழுது வரை கனகா நடித்த திரைப்படங்களை நான் பார்க்கவில்லை என்றும், தனக்கு 88 வயதாகிறது இருப்பினும் கனகா வந்தால் ஏற்றுக்கொள்வேன் என்றும் கூறியிருந்தார். இப்படி இருக்கையில் நீண்ட நாட்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்த தேவதாஸ் இன்று மரணம் அடைந்துள்ளார்.
-
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications