லெப்ட்ல இண்டிகேட்டர்.. ரைட்ல கை! ஸ்ட்ரைட்டா பாஜக பக்கம் வண்டியை விட்ட கஸ்தூரி.. குழம்பிய தொண்டர்கள்
சென்னை: நடிகை கஸ்தூர் இன்று மதுரையில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக இந்த லோக்சபா தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று கூறிவந்த கஸ்தூரி, அடுத்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். தற்போது பாஜகவை ஆதரித்து பிரசாரம் செய்ததால் அவரது நிலைப்பாடு என்னவென்று தெரியாமல் தொண்டர்கள் குழம்பியுள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை கஸ்தூரி, சமீப காலமாக அரசியல் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். சமூக வலைத்தளங்களில் அதிரடியான அரசியல் கருத்துக்களை பதிவிட்டு வரும் கஸ்தூரி தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கேற்று அனல் பறக்க பேசி வருகிறார்.

திமுகை கடுமையாக விமர்சித்து வந்த கஸ்தூரி, கடந்த மாதம் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் போது லோக்சபா தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்றார். செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரியிடம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், "அது உண்மைதான். தமிழகத்தை பொருத்தமட்டில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது. திமுக வலுவாக இருக்கிறது என்பதை விட திமுகவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் வலிமையாக இல்லை என்பதுதான் உண்மை. எனவே இந்த தேர்தலில் திமுக தோற்காது. வேண்டுமானால் திமுகவை எதிர்க்கும் வலுவான எதிர்க்கட்சி யார் என்பதை நிரூபிக்கும் தேர்தல் இது என வைத்துக் கொள்ளலாம்" என்றார்.
இப்படி திமுகவிற்கு ஆதரவாக பேசியிருந்த கஸ்தூரி, அதற்கு ஓரிரு தினங்கள் முன்புதான் சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்படி பழனிசாமியை சந்தித்து பேசினார். தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, பாஜக கூட்டணியில் மீண்டும் அதிமுக இணையுமா என்றெல்லாம் பரபரப்பு விவாதங்கள் நடைபெற்று வந்த அந்த நேரத்தில் திடீரென எடப்பாடி பழனிசாமியை கஸ்தூரி சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது.
இந்த சந்திப்பு தொடர்பாக எந்த ஒரு விளக்கத்தையும் கஸ்தூரி தரப்பில் வைக்கவில்லை. இந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இறுதி கட்ட பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில், பாஜக வேட்பாளரை ஆதரித்து கஸ்தூரி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மதுரை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் கஸ்தூரி ஈடுபட்டார்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்த கஸ்தூரி, பிறகு தேர்தலில் திமுகதான் வெற்றி பெறும் என்று ஆருடம் கூறினார். தற்போது பாஜக வேட்பாளரை ஆதரித்து அனல் பறக்கும் பிரசாரத்தில் கஸ்தூரி ஈடுபட்டு இருக்கிறார் இதனால் அவர் எந்தக் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார் என்று புரியாமல் மக்கள் குழம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications