தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நான் பேசிய கருத்து தவறாக திரிக்கப்பட்டுள்ளது! நடிகை கஸ்தூரி விளக்கம்
சென்னை: தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நான் பேசிய கருத்து தவறாக திரிக்கப்பட்டுள்ளது , வந்தேறிகள் எனக் கூறும் நபர்கள் தமிழர்களா என்றுதான் நான் பேசினேன் என நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை போயஸ் தோட்டத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: தெலுங்கர்கள் குறித்து எனது பேச்சு தவறாக திரிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு மக்களின் மனதை புண்படுத்திவிட்டதாக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.

பிராமணர்களை வந்தேறிகள் எனக் கூறும் நபர்கள் தமிழர்களா என்றுதான் நான் பேசினேன். என் மாமியார் வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள்தான். என்னை தெலுங்கு பேசும் மக்கள் மருமகளாகவும் அவர்கள் வீட்டு மகளாகவும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
தமிழும் தெலுங்கும் எனக்கு இரு கண்கள் போன்றது. பொய்யான குற்றச்சாட்டுக்கு ஓடி ஒளியும் ஆள் நான் இல்லை. எனக்கு குடிப்பழக்கமே கிடையாது. என்னை ஓசி குடி என்கிறார்கள், குடிகாரி என சித்தரிக்கிறார்கள். எத்தனையோ பொய்களை பார்த்துவிட்டேன் என கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு கோரி நேற்றைய தினம் எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசியதாவது: நான் ஹைதராபாத்துக்கு குடிபெயர்ந்து 4 வருஷம் ஆகுது.. இங்க சினிமாவை விடுங்க.. தொலைக்காட்சிகளில் நடுவர் ஆக கூட எனக்கு வாய்ப்பு தரக் கூடாது என மேலிடத்தில் இருந்து பிரஷர் தருவதாக சொல்கின்றனர்.
சுதந்திரப் போராட்டத்தில் உயிரைக் கொடுத்தவர்கள் பெரும்பாலானவர்கள் அந்தணர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ் அந்தணர்கள். தமிழர்கள். ஆரிய வந்தேறி.. ஆரிய வந்தேறி என்கிறார்கள்.. யார் ஆரிய வந்தேறி? கைபர் போலன் வழியாக பல மதத்தினர் வந்தாங்க.. அதை எல்லாம் பேச ஆரம்பிச்சா உங்க ஓட்டுதானே குறையும்..
4,000 வருஷத்துக்கு முன்னாடி வந்ததாக சொல்லப்படுவதைப் பற்றி சொல்றீங்களே.. ஆரியர்கள் இங்கே வருகை தந்த போது ஷத்ரியர்கள் இடத்தில் வன்னியர்கள் இணைந்து கொண்டார்களோ, வைசியர் பாகுபாட்டில் செட்டியார்கள், முதலியார்கள், வேளாளர்கள் இணைந்து கொண்டார்களோ கோவில் பணிகளைச் செய்கிறவர்களில் சிவாச்சாரியார்கள், ஐயர்கள், ஐயங்கார்கள் , பண்டாரங்கள் போன்றவர்கள் இணைந்து கொண்டார்கள்.
300 வருஷம் முன்னாடி ஒரு ராஜாவுக்கு கூட சேர்த்துகிட்ட அந்தப்புர மகளிரோ சேவைகள் செய்ய வந்தவர்கள் எல்லாம் தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? நீங்கள் யார் தமிழர்கள்?. அதனால்தானே தமிழர் முன்னேற்றக் கழகம்னு பெயர் வைக்க முடியமலை.. திராவிடர்கள் பெயர் கண்டுபிடிச்சீங்க. இவ்வாறு கஸ்தூரி பேசினார். இந்த நிலையில் இவருடைய பேச்சுக்கு தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வீடியோ மூலம் கண்டனம் தெரிவித்து தனது கருத்தை திரும்ப பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அது போல் பாஜக அமர் பிரசாத் ரெட்டியும், நடிகை கஸ்தூரி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இப்படியாக கஸ்தூரியின் பேச்சுக்கு தொடர்ந்து எதிர்ப்பு வந்த நிலையில் அவரது தனது ட்விட்டர் பக்கத்தில் கூட இது பொய். நான் சொன்னது என்ன, நீங்கள் திரித்து போட்ட தலைப்பு என்ன? தமிழகத்தில் வந்தேறி தெலுங்கர் சிலர் தமிழினம் என்று சொல்லிக் கொண்டு பிராமணரை தமிழரில்லை என்கிறார்கள் என சில ஊடகங்களில் போட்ட செய்தியை சுட்டிக் காட்டி கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications