த்ரிஷா, விசித்ராவை தொடர்ந்து! அமைதிப்படை அல்வா சீனில் சத்யராஜ் அத்துமீறினாரா? நடிகை கஸ்தூரி பதில்
சென்னை: அமைதிப்படை படத்தில் அத்துமீறல் நடந்ததா, நடிகர் சத்யராஜ் குறித்து நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.
நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அவதூறாக பேசியிருந்ததாக அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இதையடுத்து மன்சூருக்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில் அவர் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். த்ரிஷாவும் மன்னிப்பது தெய்வீக குணம் என கூறி மன்னித்துள்ளார். த்ரிஷாவின் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் பாடகி சின்மயியோ நயன்தாரா குறித்து ராதாரவி பேசியதை கேள்வி எழுப்பினார்.
அது போல் ஒரு முறை ஐஸ்வர்யா ராயை ரேப் செய்திருப்பேன் என்றும் அவர் கூறிய போது யாருமே தட்டிக் கேட்கவில்லை, நடவடிக்கை பாயவில்லையே ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார். அது போல் நடிகை விசித்ராவோ தெலுங்கு நடிகர் ஒருவர் தன்னிடம் பாலியல் ரீதியாக பேசியதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.
அது போல் இயக்குநர் சீனு ராமசாமி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக நடிகை ஒருவர் பரபரப்பை கிளப்பினார். ஆனால் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து நடித்த போது பாலியல் தொல்லை தனக்கு நடந்ததில்லை என்றும் அவர் போல் சிறந்த மனிதர் இருக்க முடியாது, மிகவும் அன்பானவர் ரஜினிகாந்த் என நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி அமைதிப்படை படத்தில் நடித்த சத்யராஜுடன் இணைந்து அல்வா கொடுக்கும் சீனில் நடித்தது குறித்து உங்கள் கருத்து என்ன? அல்வா சீனில் அவர் மோசமாக நடித்தது குறித்து நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும். அவருக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். இதற்கு கஸ்தூரி பதிலளிக்கையில் சத்யராஜ் சார் மிகவும் நல்லவர்.

அந்த அல்வா சீனில் நான் நடித்தது என் நினைவில் இருக்கிறது. அந்த சீனில் எனக்கு அசவுகரியம் இருந்ததை தெரிந்து கொண்ட சத்யராஜ் மிகவும் ஜாக்கிரதையாக நடித்தார். அந்த சீன் மட்டுமே 4 மணி நேரம் எடுத்தார்கள். இதை வெறும் நடிப்பாகவே நினைத்து நாங்கள் நடித்தோம். அந்த சீனை என் தாயும் அங்கிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
மணிவண்ணன் சாரும் சத்யராஜ் சாரும் எப்படியெல்லாம் டயலாக்கை பேசுகிறார்கள் என என் தாய் என்னிடம் ஆச்சரியத்துடன் கூறினார். அந்த சீன் எடுக்கப்பட்ட தொழில்நுட்பத்தை புரிந்து கொள்ளுங்கள். அங்கு சத்யராஜ் சாரால் மோசமான நடத்தை ஏதும் நடக்கவில்லை. அமைதிப்படை ஷூட்டிங் அனுபவம் மறக்க முடியாதது. சத்யராஜின் நடிப்பை அவர் கூடவே இருந்து பார்த்தேன். என்னிடம் காமெடியாக பேசுவார். அல்வா சீன் உள்பட அந்த படத்தில் நடித்த ஒவ்வொரு சீனையும் நினைத்து பெருமைப்படுகிறேன் என கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications