பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி! பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்துவை நினைவிருக்கா?
சென்னை: நடிகை கஸ்தூரி, பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை, சென்னை திநகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சந்தித்து இணைந்தார். ஏற்கெனவே குஷ்பு, நமீதா, கலா மாஸ்டர் உள்ளிட்டோர் பாஜகவில் இருந்து வருகிறார்கள். மீனாவும் பாஜகவில் இணைவார் என சொல்லப்பட்டு வரும் நிலையில் தற்போது கஸ்தூரி இணைந்துள்ளார்.
தமிழக பாஜக தலைமை அலுவலகமான சென்னை திநகர் கமலாலயத்திற்கு நடிகை கஸ்தூரி வந்திருந்தார். அங்கு மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து அவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இத்தனை நாட்களாக பாஜகவுக்கு ஆதரவாகவே பேசி வந்தார். இந்து மக்கள் கட்சியுடன் இணைந்து கோயில்களுக்கு செல்வது, இந்து மதத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களை விமர்சிப்பது என இருந்தவர் கஸ்தூரி. அது போல் அவர் சமூக பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து வந்தார். அண்மையில் கூட திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கு விவகாரத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். அது போல் தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு கூட கஸ்தூரி நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருந்தார்.
நடிகை கஸ்தூரியுடன் திருநங்கையான நமீதா மாரிமுத்துவும் பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பே கஸ்தூரி பாஜகவில் இணைகிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால் அவர் இணையவில்லை. அது போல் தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையையும் சந்தித்து பேசியிருந்தார்.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications