Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் மீண்டும் ஆதாரத்துடன் வந்த நடிகை கஸ்தூரி.. இதென்ன பாத்ரூம் தண்ணியா? டக்குன்னு கவனித்த திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பெய்த பெருமழையைவிட, கஸ்தூரி வீட்டு முன்பு நின்றது மழை தண்ணீரா? சாக்கடை தண்ணீரா? என்பதே பெரும் விவாதபொருளாக இன்று மாறிவிட்டது. இந்த சலசலப்புக்கு இதுவரை ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. மறுபடியும் மழைநீர் ஆதாரத்துடன் வந்து, திமுகவை கேள்வி கேட்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி.

சென்னையில் எப்போது மழை வந்தாலும், திமுக அரசை குற்றஞ்சாட்டி, நடிகை கஸ்தூரியின் காரமான விமர்சனங்கள் எழுவது வாடிக்கையாகும். அந்தவகையில், இப்போதும் தன்னுடைய வீட்டை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரை சுட்டிக்காட்டி ட்வீட்களை பதிவிட்டிருந்தார்.. ஆனால், தமிழக அரசு முன்னெடுத்திருந்த நிவாரண பணிகளையும், மீட்பு நடவடிக்கைகளையும் திமுக கூட்டணி கட்சிகள் பாராட்டியிருந்தன.

kasthuri chennai flood weather dmk government dr sharmila

ஷர்மிளா: அந்தவகையில், திமுக ஆதரவாளரும், விசிகவின் முக்கிய பிரமுகருமான டாக்டர் ஷர்மிளாவும் ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார். அதில், "மழையை பற்றி ஓவரா பேசிப் பேசி ஒரு பீதியை கிளப்ப முயற்சி பண்றாங்களோன்னு தோணுது... முன்எச்சரிக்கையுடன் இருங்க.. பாதுகாப்பா செயல்படுங்க... ஆனா மழையை ரசிக்க மறந்துடாதீங்க... நமக்கு வருஷத்துல ரெண்டு மாசம் தான் இந்த வாய்ப்பு கிடைக்கும்" என பதிவிட்டிருந்தார்.

ஷர்மிளாவின் இந்த பதிவை பார்த்தமே நடிகை கஸ்தூரி, "ரோம் நகரம் எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். இந்தம்மா மழைய ரசிக்க சொல்லுது. எங்க வீட்லல்லாம் முட்டி வரை சாக்கடை தண்ணி முட்டி நிக்குது. பழைய பில்டிங். மழைய ரசிக்க முடியல . உங்க மாடி வீட்டுல இருக்கவச்சு சூடா டீ சம்சா குடுத்தீங்கன்னா நாங்களும் ரசிப்போம்" என்று கிண்டலடித்திருந்தார்.

திமுக வீடியோ: உடனே திமுக தரப்பினர், கஸ்தூரியின் ட்வீட்டுக்கு பதிலடி தரும்வண்ணம், கஸ்தூரி வசிக்கும் தெரு, மற்றும் அந்த பகுதியை வீடியோ எடுத்து போட்டிருந்தனர்.. அந்த வீடியோவில், துளியும் மழைத்தண்ணீர் தேங்கி காணப்படவில்லை.. சென்னையில் மழை பெய்ததற்கான எந்த அடையாளவும் அந்த வீடியோவில் தென்படவில்லை. எனவே, கஸ்தூரியின் குற்றச்சாட்டு பொய் என்பதுபோலவே, அந்த வீடியோவை பதிவிட்டிருந்தனர்.

அத்துடன் டாக்டர் ஷர்மிளாவும் கஸ்தூரிக்கு உடனடியாக பதிலடி தந்தார்.. அதில், "வந்துட்டாய்யா வரிஞ்சுகட்டிகிட்டு! சங்கிகளுக்கு பிடில் வாசிக்கிறது உங்களுக்கு கை வந்த கலையாச்சே! என்னேரமும் தண்ணியில இருந்தா, எல்லாமே தண்ணியாத்தான் தெரியும்.இது உங்க வீடு தாணே மேடம்! முழங்கால் அளவுக்கு கூடத் தண்ணியில்லை, இதுல முட்டி வரைக்கும் த‌ண்ணி நிக்குதுன்னு பொய் வேற" என்று பதிவிட்டிருந்தார்.

கஸ்தூரி ட்வீட்: உண்மையிலேயே கஸ்தூரி வீட்டில் தண்ணீர் தேங்கி நின்றதா? இல்லையா? என்ற இந்த விவாதம் கடந்த 2 நாட்களாகவே ஓடிக் கொண்டிருக்கிறது.. இந்நிலையில், மறுபடியும் கஸ்தூரி சில போட்டோக்களை தன்னுடைய ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.. அதில், "நேற்று 3 மணி அளவில் என் வீட்டு நிலமை. ,பொய்யை பரப்பி கொக்கரித்த , ப்ரோக்கர் பயலுகளுக்கும் ,மழை ரசிகைக்கும் 200 ரூபாய்க்கு மொத்தத்தையும் அடகு வைத்த திராவிடிய கும்பலுக்கும் சமர்ப்பணம்" என்று பதிவிட்டுள்ளார்.

kasthuri chennai flood weather dmk government dr sharmila

டாக்டர் ஷர்மிளா உள்ளிட்டவர்களை இப்படி காட்டமாக குறிப்பிட்டாலும், கஸ்தூரி பதிவிட்டிருக்கும் போட்டோவில், வீடுகளின் அறைகளும், வீட்டை சுற்றியுள்ள பகுதிகளும் தென்படுகின்றன.. வீடு முழுக்க தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது.. இந்த தண்ணீர் உடனடியாக வற்றும்படியாக இல்லை என்பதும் தெரியவருகிறது. வீட்டிற்குள் யாராலுமே நடமாட முடியாத அளவுக்கு தண்ணீர் அளவு உயர்ந்துள்ளது.

எது உண்மை? : கஸ்தூரி வீட்டு பகுதியை வீடியோ எடுத்த திமுகவினர், வீட்டிற்குள் நிற்கும் தண்ணீருக்கும், கஸ்தூரியின் ஆதங்கத்துக்கும் என்ன பதில் சொல்ல போகிறார்கள் தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+