பாஜகவில் சேரப்போகிறேனா?... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா - நடிகை கஸ்தூரி ட்வீட்
நான் என் குலதெய்வம் முருகனைப் பார்த்தேன் பாஜகவின் எல். முருகனை பார்க்கவில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.
சென்னை: பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவல் குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று கூறியுள்ள கஸ்தூரி நான் பாஜக மாநில தலைவர் எல். முருகனைப் பார்க்கவில்லை என் குல தெய்வம் முருகனைப் பார்த்தேன் என்று கூறியுள்ளார்.
Recommended Video
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அமித்ஷாவின் தமிழக வருகை பாஜகவினர் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது. திமுகவினர் சிலர் பாஜகவில் இணைந்து வரும் நிலையில் நடிகை கஸ்தூரியும் பாஜகவில் இன்று இணையவுள்ளதாக தகவல் வெளியானது.

கந்த சஷ்டி திருவிழா நேற்று தமிழகம் முழுவதும் முருகன் ஆலயங்களில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஏராளமானோர் முருகன் கோவிலுக்கு சென்று சூரசம்ஹாரத்தை பார்த்து முருகனை தரிசனம் செய்து வந்தனர். இதை தவறாக புரிந்து கொண்ட சிலர் நடிகை கஸ்தூரி பாஜக தலைவர் எல். முருகனை சந்தித்து பேசியதாகவும் அவர் பாஜகவில் இணையப்போவதாகவும் செய்தி பரப்பினர். இந்த தகவல் வெளியான நிலையில் இந்த செய்தி வதந்தி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.
My phone is ringing off the hook informing me that I am joining BJP today in presence of Amit Shah .
— Kasturi Shankar (@KasthuriShankar) November 21, 2020
Another example of how rumors are more powerful than reality.
Although I confess I spent all last evening with Chief Murugan. 😉
அமித்ஷா முன்னிலையில் நான் இன்று பாஜகவில் சேர்கிறேன் என்று தெரிவிக்கும் விதமாக எனக்கு தொலைபேசி அழைப்புகள் வருகிறது. வதந்திகள் யதார்த்தத்தை விட சக்திவாய்ந்தவை என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு என்று பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.
அப்போ கட்சியில சேர்கிறேன் என்ற செய்தி?
— Kasturi Shankar (@KasthuriShankar) November 21, 2020
இந்த பொய் எங்கு உருவாக்கப்பட்டது என்பதில்தான் சுவாரஸ்யம் அடங்கியுள்ளது.
வெற்றிவேல் முருகனுக்கு .... அரோகரா. 🙏
நேற்று எனது மாலை பொழுதை முருகனுடன் கழித்தேன். பாஜக தலைவர் முருகன் அல்ல, கடவுள்களின் தளபதி முருகன். வேல் யாத்திரை எல்.முருகன் அல்ல, என் குலதெய்வம் வேல் முருகன் என்றும் பதிவிட்டுள்ளார்.
Not BJP Chief Murugan, but the commanderinchief of the Gods, Lord Murugan.
— Kasturi Shankar (@KasthuriShankar) November 21, 2020
Not VelYatra LMurugan but my kuladeivam VelMurugan . pic.twitter.com/QPoFRP9ypQ
அப்போ கட்சியில சேர்கிறேன் என்ற செய்தி? இந்த பொய் எங்கு உருவாக்கப்பட்டது என்பதில்தான் சுவாரஸ்யம் அடங்கியுள்ளது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.












Click it and Unblock the Notifications