காஷ்மீர் போல தமிழ்நாட்டில் பிராமணர்கள் "இனப்படுகொலை" நடக்குது.. நடிகை கஸ்தூரி பகீர் பேச்சு!
சென்னை: ஜம்மு காஷ்மீர் போல தமிழ்நாட்டில் பிராமணர்கள் இனப்படுகொலைதான் நடக்கிறது; தமிழ்நாட்டில் எத்தனையோ பத்தாண்டுகளாக, 60 ஆண்டுகளுக்கு மேலும் நடப்பதும் இனப்படுகொலைதான்; ஒருத்தன் உணர்வை அழிப்பதும் அடையாளத்தை அழிப்பதும் அந்த இனத்தை அழிப்பதற்கு சமம்தான். எனக்கு அதில் ரொம்ப பயமாக இருக்கிறது என நடிகை கஸ்தூரி பேசியிருக்கிறார்.
சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசியதாவது: நான் ஹைதராபாத்துக்கு குடிபெயர்ந்து 4 வருஷம் ஆகுது.. இங்க சினிமாவை விடுங்க.. தொலைக்காட்சிகளில் நடுவர் ஆக கூட எனக்கு வாய்ப்பு தரக் கூடாது என மேலிடத்தில் இருந்து பிரஷர் தருவதாக சொல்கின்றனர்.

காஷ்மீர் போல இனப்படுகொலை: அந்தக் காலத்தில் இருந்த பிராமணர்களைத்தான் நீங்க ஓட ஓட விரட்டிவிட்டுட்டீங்களே.. காஷ்மீரில் நடந்தது மட்டும் இனப்படுகொலை அல்ல.. அங்க மொத்தமாக வெட்டுனாங்க.. அவங்க உயிருக்கு பயந்து வெளியே வந்தாங்க.. இங்கே தமிழ்நாட்டில் எத்தனையோ பத்தாண்டுகளாக, 60 ஆண்டுகளுக்கும் மேலும் நடப்பதும் இனப்படுகொலைதான். ஒருத்தன் உணர்வை அழிப்பதும் அடையாளத்தை அழிப்பதும் அந்த இனத்தை அழிப்பதற்கு சமம்தான். எனக்கு அதில் ரொம்ப பயமாக இருக்கிறது.
பிராமணப் பெண்கள் கிடைக்காதே..: ஆளும் கட்சிக்கு நாளைக்கு கல்யாணம் பண்ண பிராமணப் பெண்கள் எப்படி கிடைப்பாங்க? நீங்க எங்க இனத்தை அழிச்சுட்டீங்கன்னா, அடையாளத்தை அழிச்சுட்டீங்கன்னா.. எனக்கு அதுவே கவலையாக இருக்கிறது.
ஐயர் இருப்பாங்களா?: எல்லாமே பொழப்புதான்.. வயிற்றில் அடித்தான் பிராமணன் தாங்கமாட்டான். ஏன்னா அவன் சாப்பிடுறதே அரை வயிறு, கால் வயிறு கஞ்சி. அடுத்த தலைமுறையில் யார் செத்தாலும் ஐயர் இருப்பாங்களா என்கிற கவலை வந்துவிட்டது. இது இந்து சமுதாயத்தின் கவலை. பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு அங்கமாக வகிக்க வேண்டிய ஒரு குலத்தை ஏன் ஒழிக்கிறார்கள் எனில் ரொம்ப சிம்பிளான விஷயம்.. திராவிடியம் பேசக் கூடியவர்களுக்கு கடவுள் மறுப்பு என்பதுதான் முதல் கொள்கை. அதை சார்ந்ததுதான் பிராமண எதிர்ப்பு கொள்கை.
சமூகங்கள் பிளவு: அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் இந்து சமுதாயத்தை யாருமே ஒன்றுமே செய்ய முடியாது. ஒவ்வொரு சமுதாயமாக, அவன் இவனை ஒடுக்கினான் என கூறி பிளவுபடுத்தி வைத்திருக்கின்றனர். வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் என்பது சொன்னது ஆங்கிலேயர்களைப் பார்த்து அல்ல... ஐயர், ஐயங்கார்களைப் பார்த்துதான். நீங்கள் குடிப்பதும் இறைச்சி சாப்பிடுவதும் இனத்தை இழிவுபடுத்துகிற ஒரு துருப்புச் சீட்டை மற்றவர்களுக்கு எடுத்துக் கொடுப்பதுதான்.
ஆரியர்கள் வருகை உண்மைதான்: சுதந்திரப் போராட்டத்தில் உயிரைக் கொடுத்தவர்கள் பெரும்பாலானவர்கள் அந்தணர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ் அந்தணர்கள். தமிழர்கள். ஆரிய வந்தேறி.. ஆரிய வந்தேறி என்கிறார்கள்.. யார் ஆரிய வந்தேறி? கைபர் போலன் வழியாக பல மதத்தினர் வந்தாங்க.. அதை எல்லாம் பேச ஆரம்பிச்சா உங்க ஓட்டுதானே குறையும்.. 4,000 வருஷத்துக்கு முன்னாடி வந்ததாக சொல்லப்படுவதைப் பற்றி சொல்றீங்களே.. ஆரியர்கள் இங்கே வருகை தந்த போது ஷத்ரியர்கள் இடத்தில் வன்னியர்கள் இணைந்து கொண்டார்களோ, வைசியர் பாகுபாட்டில் செட்டியார்கள், முதலியார்கள், வேளாளர்கள் இணைந்து கொண்டார்களோ கோவில் பணிகளைச் செய்கிறவர்களில் சிவாச்சாரியார்கள், ஐயர்கள், ஐயங்கார்கள் , பண்டாரங்கள் போன்றவர்கள் இணைந்து கொண்டார்கள்.
அந்தப்புர சேவைக்கு வந்த தெலுங்கர்கள்: அதை எல்லாம் மறந்துவிட்டு தெரியாமத்தான் கேட்கிறேன்.. 300 வருஷம் முன்னாடி ஒரு ராஜாவுக்கு கூட சேர்த்துகிட்ட அந்தப்புர மகளிரோ சேவைகள் செய்ய வந்தவர்கள் எல்லாம் தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? நீங்கள் யார் தமிழர்கள்?. அதனால்தானே தமிழர் முன்னேற்றக் கழகம்னு பெயர் வைக்க முடியமலை.. திராவிடர்கள் பெயர் கண்டுபிடிச்சீங்க..
திராவிடியாத்தனத்தைவிட அது கொச்சை அல்ல: பார்ப்பான், நூலிபான்.. பிராமண அடிவருடி.. சொம்பு என சொல்கிறார்கள். அவர்களுக்காகவது அடிவருடி சொம்பு என சொன்னார்கள்.. என் நிலைமையை யோசிச்சு பாருங்க.. நேரா ஒரே ஒரு விஷயம்தான்... 'அதில்'தான் கொண்டு போய் நிறுத்துவாங்க.. ஒரு பெண்ணாய் போய்விட்டேன்.. நடிகையாகிப் போய்விட்டேன்.. அதற்கு என சில வார்த்தைகள் இருக்கிறது.. அவங்க சொல்ற வார்த்தை 'திராவிடியாத்தனத்தை'விட ரொம்ப கொச்சையானது அல்ல. அப்படியே சொன்னாலும் என் சுய உழைப்பைப் போட்டுதான் உழைக்கிறேன் என சந்தோஷமாக சொல்லிவிட்டுப் போவேன்.. உன்னை மாதிரி கூட்டிக் கொடுத்து, மக்களைப் பிளவுபடுத்தி,அநியாயமாக, அக்கிரமமாக மாமா வேலை பார்க்கிற உன் வேலையை விட என் வேலை பரவாயில்லை என்று சொல்வேன்.
தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்: ஹைதராபாத்தில்தான் 4 ஆண்டுகள் நான் இருக்கிறேன். அங்கே திராவிடர்களா எனக் கேட்டால் யாருக்கும் தெரியவில்லை. உங்களைவிட எங்க ஊரில்தான் தெலுங்கு பேசுகிறவர்கள் (தமிழ்நாடு) அமைச்சரவையில் இருக்கிறார்கள் என சொன்னேன். அப்படியா என பெருமைப்பட்டனர். தமிழக அமைச்சரவையில் 5 பேர் அமைச்சர்களாக இருக்கின்றனர்.
தெலுங்கு பேசுகிறவர்களுக்கு அதிகாரம்: ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என திருமா சார் சொன்னார்.. அவர் தெரிஞ்சு சொன்னாரோ தெரியாமல் சொன்னாரோ.. ஆதி குடிகளான பறையர்களுக்குதான் பங்கு இல்லை.. தெலுங்கு பேசியவர்களுக்கு நிறைய கொடுத்துவிட்டனர். நம்ம கிட்ட இருந்து உரிமையை, பிழைப்பை அடிச்சு பிடுங்காம இருந்தா சரி.. இவ்வாறு நடிகை கஸ்தூரி தெரிவித்தார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications