4 சீட்டுக்காக… இப்படியா மாத்தி, மாத்தி பேரம் பேசுவீங்க… பாமகவை சீண்டிய நடிகை கஸ்தூரி
சென்னை: 4 சீட்டுக்காக.... இப்படியா மாத்தி, மாத்தி பேரம் பேசறதா என்று பாமகவுக்கு நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் கூட்டணி அமைக்கும் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இறங்கி உள்ளன.அதிமுக, பாஜக ஓர் அணியாகவும், காங்கிரஸ், திமுக கூட்டணி மற்றொரு அணியாகவும் தேர்தலை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை எந்த கூட்டணியும் இன்னும் அறிவிக்கவில்லை.
இதற்கிடையே, அதிமுக அல்லது திமுக இரு கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி அமைக்க பாமக முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந் நிலையில், பாமகவின் அரசியல் நிலைப்பாட்டை கேலி செய்து நடிகை கஸ்தூரி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாமகவின் இரட்டை நிலைப்பாடு என்று ஒரு கருத்தை முன் வைத்து விமர்சித்து உள்ளார்.
PMK 4 சீட்டுக்கு இப்பிடி மாத்தி மாத்தி பேரம் பேசுறதுக்கு பேசாம அதிமுக திமுக ரெண்டு கட்சியோடயும் தலா 2 சீட்டு கூட்டணி வச்சி 🤦♀️புரட்சி பண்ணிரலாம்.
— Kasturi Shankar (@KasthuriShankar) February 17, 2019
திராவிட அரசியலுக்கு மாற்று, டாஸ்மாக் கட்சிகளுக்கு எதிர்ப்பு, மாற்றம் முன்னேற்றம் எல்லாம் என்ன ஆச்சு? 🥭
அதில், PMK 4 சீட்டுக்கு இப்பிடி மாத்தி மாத்தி பேரம் பேசுறதுக்கு பேசாம அதிமுக திமுக ரெண்டு கட்சியோடயும் தலா 2 சீட்டு கூட்டணி வச்சி புரட்சி பண்ணிரலாம். திராவிட அரசியலுக்கு மாற்று, டாஸ்மாக் கட்சிகளுக்கு எதிர்ப்பு, மாற்றம் முன்னேற்றம் எல்லாம் என்ன ஆச்சு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கஸ்தூரியின் இந்த பதிவை பார்த்து அதிர்ச்சியடைந்த பாமக தொண்டர்கள், எங்கள் கட்சி மீது திட்டமிட்டு பழி சுமத்தப்படுவதாகவும், பாமக ஒரு போதும் கலங்காது என்றும் பதில் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications