என்ன இருந்தாலும் சுஷ்மாவை மறக்க முடியாது.. கஸ்தூரி சிலாகிப்பு

மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெய்சங்கர் குறித்து கஸ்தூரி ட்வீட் போட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Actress Kasthuri tweet | சுஷ்மா சுவராஜ் குறித்து கஸ்தூரி நெகிழ்ச்சி ட்வீட்

    சென்னை: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி என்பது மிக மிக முக்கியமானது. இது ஒரு ஹாட் சீட். இதை சிறப்பாக கையாண்டவர்தான் சுஷ்மா சுவராஜ்.

    மோடியின் முதல் ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக அவர் சிறப்பாக செயல்பட்டார். உலகம் முழுவதும் பரவி வாழும் இந்தியர்களின் அன்பைப் பெற்றவர்தான் சுஷ்மா சுவராஜ். அப்படி சிறப்பாக செயல்பட்டார்.

    அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரது டிவிட்டர் பக்கம் முழுவதும் தினசரி உதவி கேட்டு வரும் செய்திகள்தான் வழிந்தோடும். உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் உதவி கேட்பார்கள். முடிந்தவரை அத்தனை பேருக்குமே ஏதாவது தீர்வு சொல்லத் தவறாதவர் சுஷ்மா சுவராஜ்.

    அத்வானி

    அத்வானி

    மறைந்த ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதை கொண்டவர் சுஷ்மா. இவரது அரசியல் ஆசான் அத்வானி. இன்று அத்வானி ஓரம் கட்டுப்பட்டு விட்டார். ஜெயலலிதா மறைந்து விட்டார். இதோ இப்போது சுஷ்மாவும் ஓய்வுக்குப் போய் விட்டார்.

    அறுவை சிகிச்சை

    அறுவை சிகிச்சை

    சுஷ்மாவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. அவரது உடல் நிலை இதற்கு முக்கியக் காரணம். அவரது பதவிக்காலத்தின் கடைசியில் அறுவைச் சிகிச்சைக்கு உட்பட்டு மீண்டு வந்தவர் சுஷ்மா. எனவேதான் இம்முறை அவருக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை.

    பிரதமருக்கு நன்றி

    பிரதமருக்கு நன்றி

    அதேசமயம், தனக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்த பிரதமர் மோடிக்கு நன்றி கூறியுள்ளார் சுஷ்மா சுவராஜ். இதற்கெல்லாம் பெரிய மனது இருக்க வேண்டும். சுஷ்மாவிடம் இது இருக்கிறது. அதனால்தான் 2வது முறை பதவி கிடைக்காத போதும் கூட பிரதமருக்கு நன்றி கூறியுள்ளார் சுஷ்மா.

    கஸ்தூரி ட்வீட்

    கஸ்தூரி ட்வீட்

    தற்போது புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் பதவிக்கு வந்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. நடிகை கஸ்தூரியும் வாழ்த்தியுள்ளார். அதேசமயம், அவர் சுஷ்மாவை நினைவு கூர்ந்துள்ளார். இதுதொடர்பாக டிவீட் போட்டுள்ளார் கஸ்தூரி.

    சுஷ்மா சுவராஜ்

    கஸ்தூரி போட்டுள்ள அந்த டிவீட்டில், தூதராக இருந்த அனுபவம் கொண்ட சுப்பிரமணியம் ஜெய்சங்கர் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டது வித்தியாசமாக உள்ளது. அதேசமயம், சுஷ்மா சுவராஜை நாடு நிச்சயம் மிஸ் பண்ணும். என்ன ஒரு அமைச்சர் அவர். அவரது எளிமையும், ஈஸியாக அணுகும் தன்மையும் புதிய அமைச்சரின் கீழும் தொடரும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+