எந்த கட்சிக்கு ஓட்டு போடணும்?.. கஸ்தூரி சொன்ன பதில் என்ன தெரியுமா?
நல்ல வேட்பாளராக பார்த்து உங்கள் ஓட்டு போடுங்கள் என்று கஸ்தூரி ட்வீட் போட்டுள்ளார்.
சென்னை: யாருக்கு போடறதுன்னு திடீரென்று ஒருவருக்கு சந்தேகம் வந்துவிட்டது.. அந்த சந்தேகத்தை நடிகை கஸ்தூரியிடம் கேட்க.. அதற்கு கஸ்தூரி அளித்த பதில்தான் இது!
நாட்டு நடப்பை தினமும் கவனித்து கொண்டு, அது சம்பந்தமான ட்வீட்டுகளை போட்டு வருபவர் கஸ்தூரி. அது அரசியல், சினிமா, விளையாட்டு என எதை பற்றி வேண்டுமானாலும் கருத்தை பதிவு செய்வார்.
இதற்காக சில சமயம் இவருக்கு பாராட்டும், வாழ்த்தும் கிடைத்தாலும் பல சமயம் நெட்டிசன்கள் வாயில் சிக்கிகொள்வார். கடைசியில் அவர்களிடம் ஒரு மன்னிப்பு கேட்டுவிட்டு செல்வார்.
|
ஓட்டு யாருக்கு?
இன்று டிவிட்டரில் ஒருவர் கஸ்தூரியிடம் ஒரு கேள்வி கேட்டார். அந்த கேள்வியை எதற்காக கஸ்தூரியிடம் கேட்டார் என்று தெரியவில்லை. அதாவது "எந்த கட்சிக்கு ஓட்டு போடணும்?" இதுதான் அந்த கேள்வி. உடனடியாக கஸ்தூரி இதற்கு "கட்சியை பார்த்து வாக்களிக்காதீர்.. நல்ல வேட்பாளரை பார்த்து வாக்களியுங்கள்" என்று கூறினார்.

எடப்பாடி பழனிசாமி
உண்மையிலேயே கஸ்தூரியின் இந்த பதில் பாராட்டுக்குரியது. ஏனெனில் சமீபத்தில் கஸ்தூரி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துவிட்டு வந்தார். இது தொடர்பான போட்டோக்களும் இணையத்தில் வைரலாயின. அதிமுகவில் இணைந்துவிட்டார் என்கிற செய்தியும் பரவியதும், உடனடியாக மறுப்பு தெரிவித்த கஸ்தூரி, "நல்ல குடிமகனாக அரசு செய்யும் நல்ல பணிகளுக்கு என் ஆதரவு உண்டு. அரசுக்கு மட்டுமே, அதிமுகவிற்கு இல்லை" என விளக்கினார்.
இத்தனை கேஸ்களா? உங்கள் தொகுதி எம்.பியின் கேஸ் ஹிஸ்டரி தெரியுமா?
|
கமெண்ட்டுகள்
அப்படி சொன்ன கஸ்தூரி, இன்று எந்த கட்சியையும் வலியுறுத்தாமல் பொதுவாக கருத்து சொல்லி உள்ளது வரவேற்புக்குரியதுதான். இருந்தாலும், கஸ்தூரியின் ட்வீட்டுக்கு நிறைய பேர் கமெண்ட் போட்டு வருகிறார்கள். "அப்படி பார்த்தால் நீங்க பாஜக வேட்பாளர்களுக்கு மட்டும்தான் ஓட்டு போட முடியும் மேடம்" என்று ஒரு கமெண்ட் உள்ளது.
|
கஸ்தூரி மேடம்
"நடக்கப்போவது பிரதமருக்கான தேர்தல் நம் நாட்டிற்கு நிலையான பிரதமர் தேவை.. அதற்கு ஒரே தேசிய கட்சிக்கு வாக்களிப்பதே சிறந்த முடிவாக இருக்கும்.. அதைவிடுத்து வேட்பாளரை பார்த்து வாக்களிப்பதெல்லாம் நிலையற்ற கிச்சடி சர்க்காரையே உருவாகும் கஸ்துரி மேடம்.." என்று பதிவாகி உள்ளது மற்றொரு கமெண்ட்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications