"கர்ர்ர்ர்ர்...தூ.. கஸ்தூரி உண்மையில் யாரைக் காரி துப்பியிருக்கிறார்?.. புது டிவீட்டால் பரபரப்பு!
அய்யாக்கண்ணுவின் கருத்துக்கு நடிகை கஸ்தூரி சரமாரி விமர்சித்து ட்வீட் போட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: வடிவேலு ஒரு படத்தில் சொல்லுவாரே.. "விட்டா கிறுக்கனாக்கிடுவாங்க போலிருக்கே" என்று.. அதுபோலதான் அய்யாக்கண்ணுவை பார்த்தும் நமக்கு சொல்ல தோன்றுகிறது.
இங்க இருக்கிற விவசாயிகளை எல்லாம் திரட்டி கொண்டு டெல்லி போனார். எலிக்கறி தின்று.. அம்மணமாய் நின்று.. இவர் டெல்லி ரோட்டில் நடத்திய போராட்டங்கள் அனைத்துமே இன்டர்நேஷனல் அளவில் பேசப்பட்டன. எந்த அளவுக்கு பேசப்பட்டதோ அதே அளவுக்கு மோடியின் பெயரையும் நாஸ்தி பண்ணியது.
மத்திய பாஜகவை அன்றைக்கு வாய்க்கு வந்தபடியெல்லாம் நம்மை திட்ட வைத்ததற்கு காரணம், அய்யாக்கண்ணு மீது காட்டிய கரிசனம்தான்!

வாபஸ்
சமீபத்தில் மோடி போட்டியிடும் வாரணாசியில் தானும் போட்டியிட போகிறேன் என்று அய்யக்காண்ணு சொல்ல, அய்யாக்கண்ணுவை அமித்ஷா சந்தித்து பேச.. இப்போது தன் நிலைப்பாட்டை அய்யாக்கண்ணு மாற்றி கொண்டுவிட்டார்.

திமுக தூண்டுதல்
அதாவது மோடிக்கு எதிராக போட்டியிடவில்லை என்ற முடிவுக்கு வந்தார். இதோடு இருந்தால்கூட பரவாயில்லையே.. மோடிக்கு எதிராக எங்களை டெல்லி வரை சென்று போராடத் தூண்டியதும், எங்களை முழுமையாக இயக்கியதும் காங்கிரசும் திமுகவும்தான் என்று பிளேட்டை அப்படியே திருப்பி போட்டார்! இது தமிழக மக்கள் கொஞ்சமும் எதிர்பாராதது!

காரி துப்பினார்
என்ன சொல்லி அய்யாக்கண்ணுவை விமர்சிப்பது என்றே தெரியாத நிலைக்கு பெரும்பாலான தமிழக மக்கள் உள்ளனர். இந்த நிலையில்தான் கஸ்தூரி ஒரே ஒரு வார்த்தையில் ட்வீட் போட்டு பதிலளித்துள்ளார். அதனை பதில் என்றுகூட சொல்ல முடியாது.. காரி துப்பி உள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
|
அய்யாக்கண்ணு
கஸ்தூரியின் ட்வீட்டில்,"மோடிக்கு எதிராக விவசாயிகளை டெல்லி வரை சென்று போராடத் தூண்டியதும், எங்களை முழுமையாக இயக்கியதும் காங்கிரஸ் மற்றும் திமுகதான் - அய்யாகண்ணு = கர்ர்ர்ர்ர்...தூ!" என்று பதிவிட்டுள்ளார்.

முட்டாள்கள் யார்?
கஸ்தூரியின் உச்சக்கட்ட விமர்சனம் "கர்ர்ர்ர்ர்...தூ!" இதுதான். ஒருவர் கட்சியில் சேர்வதும், விலகுவதும், தேர்தலில் போட்டியிடுவதும், பிறகு வாபஸ் பெறுவதும் அவரவர் தனிப்பட்ட உரிமைதான். இருந்தாலும், ஒருசிலர் பிழைக்க மற்றவர்களை பலிகடா ஆக்கப்படுவதும், ஏமாற்றப்படுவதும்தான் தாங்க முடியவில்லை.. அய்யாக்கண்ணு விஷயத்தில்கூட இவ்வளவு நாளா முட்டாளாக இருந்தது நாம்தான் போல இருக்கிறது!
எல்லாம் சரி.. கஸ்தூரி உண்மையில் யாரைக் காரி துப்பியிருக்கிறார்??
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications