பஸ்ஸுலதான் பாதி பேர் குறள் படிச்சோம்.. ஆவின் பால் மூலம்.. வீடுதேடி வருவது சந்தோஷம்தான்.. கஸ்தூரி

ஆவின் பால் பாக்கெட்டில் குறள் வீடு தேடி வருவதாக கஸ்தூரி தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பஸ்ஸில் தான் திருக்குறள் படித்து கற்றுக்கொண்டேன் - நடிகை கஸ்தூரி

    சென்னை: "அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் மூன்றோடு ஆவின் பாலும் சேர்கிறது. கோலம், குறள், காபி.. நல்ல விஷயம்தானே.." என்று நடிகை கஸ்தூரி ட்வீட் போட்டுள்ளார்.

    ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறளை அச்சடித்து விநியோகம் செய்ய வேண்டும் என தமிழக பாஜகவின் ஐடி பிரிவு மாநிலத் தலைவர் நிர்மல்குமார், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கடிதம் மூலம் கேட்டு கொண்டிருந்தார்.

     actress kasturi tweet about thirukural at aavin milk pocket

    அதன்படி, ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை நடைபெற்று வருவதாக தெரிவித்திருந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சடிக்கப்படும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

    அமைச்சரின் இந்த ட்வீட்டுக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் என மாறி மாறி வருகிறது. இதனை வரவேற்று நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் மூன்றோடு ஆவின் பாலும் சேர்க்கிறது. நல்ல விஷயம்தானே? காலைப்பொழுது திருக்குறளோடு துவங்கும் . டிவி , FM ரேடியோவில் தினம் ஒரு குறள் சொல்கிறார்களே. கோலம், குறள், காபி என்று வழக்கப்படுத்திக்கொள்ளலாம்" என்று பதிவிட்டார்.

    கஸ்தூரியின் இந்தட்வீட்டுக்கு மாறி மாறி கேள்விகள், சந்தேகங்கள், வரவேற்புகள் எழுந்தன. அதில் ஒருவர், "வரவேற்குற உங்க கிட்ட ஒரு கேள்வி..? இது எந்த வகையில சிறந்த ஐடியானு சொல்லுங்க.. ? பால் பாக்கெட் 2 நொடில குப்பைக்கு தான் போகும்.. இதுக்கு பதிலா வீட்லயே வச்சிருக்க கூடிய பொருட்கள்ல வேணும்னா அச்சடிச்சிருக்கலாம்" என்று தெரிவித்திருந்தார்.

    இவருக்கு கஸ்தூரி உடனடி பதில் அளித்து ட்வீட் போட்டுள்ளார். அதில், "பால் கவர் குப்பைக்கு போகுமே என்று யோசிப்பதெல்லாம் ஓவர். குறள் எழுதும் பயிற்சி தாளும் , ஏன் திருக்குறள் புத்தகமே கூட எடைக்கு போகிறது. நானெல்லாம் பள்ளியில் தமிழ் படிக்கவில்லை. பஸ்ஸில் தான் திருக்குறள் படித்து கற்றுக்கொண்டேன். தினம்தோறும் வீடு தேடி குறள் வருவது நல்ல விஷயம்தான்" என்று பதிவிட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+