அப்போவே சீட் கேட்டாரே! நடிகர் விஜய் கட்சியில் இணையும் நடிகை கீர்த்தி சுரேஷ்? கவனம்பெற்ற பதில்
சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியின் பெயர் நன்றாக இருப்பதாகவும், அவரிடம் சீட் கேட்டதாகவும் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில் தான் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவீர்களா? என்ற கேள்விக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் அதிக கவனம் பெற்றுள்ளது.
நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடித்த மகாநடி என்ற படம் பெரிய ஹிட் கொடுத்தது. சாவித்திரி வேடத்தில் நடித்து அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்த படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

மேலும் அவர் தமிழில் நடிகர் விஜய், சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் உள்பட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். ‛அண்ணாத்த’ திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்திருந்தார்.
இந்நிலையில் தான் கீர்த்தி சுரேஷ் அரசியலுக்கு வருவார் என்று தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன. மேலும் அவர் கூறும் கருத்துகளையும் அரசியல் நெடியுடனே இருக்கின்றன. அந்த வகையில் ரகு தாத்தா என்ற படத்தில் இந்தித் திணிப்பிற்கு எதிராக குரல் கொடுக்கும் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இது பெரும் விவாதத்தை கிளப்பியது.
அதன்பிறகு சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்த கீர்த்தி சுரேஷ், "சமீபத்தில் விஜய் சாரை ஒரு ஷூட்டிங்கில் சந்தித்தேன். அவர் நடிக்கும் கடைசி படம் பற்றிய தகவல் வெளிவந்திருந்தது. எப்படி சார் உணர்கிறீர்கள் என்று கேட்டேன். கடைசி படம்னு சொல்லும்போது ஒரு மாதிரி இருந்தது. ஆனா சந்தோஷம்தான் என்று சொன்னார். நான் ஜாலியாக உங்க கட்சி பேர் நல்லா இருக்கு சார், எனக்கொரு சீட் கொடுங்க எனக் கேட்டேன்" என்றார்.
இதனால் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைகிறாரா? என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு விஷயங்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இந்த வேளையில், பத்திரிகையாளர் ஒருவர், ‛‛இந்தி திணிப்பு பற்றி பேசி உள்ளீர்கள். அது அரசியல் டிரெண்ட்டாக போகிறதே'' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கீர்த்தி சுரேஷ், ‛‛இல்லை.. இல்லை.. நான் எந்த அரசியலுக்கு வரவில்லை'' என்றார்.
அதன்பிறகு, ‛‛விஜய் சார் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். நீங்கள் அவருடன் நட்பாக இருக்கிறீர்கள். இதனால் அவருடைய கட்சியில் இணைய போகிறீர்களா?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதனை கேட்ட நடிகை கீர்த்தி சுரேஷ், ‛‛இப்போதைக்கு நடிப்பு தான். இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை'' எனக்கூறி சிரித்தார்.
இதையடுத்து இன்னொரு பத்திரிகையாளர், ‛‛இப்போதைக்கு இல்லை என்றால் எதிர்காலத்தில் வர வாய்ப்புள்ளதா மேம்?’’ என கேள்வி எழுப்பினார். அதற்கு கீர்த்தி சுரேஷ் சிரித்தபடி, ‛‛எதிர்காலத்தில் வந்த பிறகு அன்னைக்கு வரமாட்டேன் என்று சொன்னீர்களே.. என்று நீங்கள் சொல்லிவிட கூடாது. அதனால் தான் இப்போதைக்கு இல்லை’’ என்றார். ஆனாலும் விடாத பத்திரிகையாளர்கள், ‛‛அரசியல் ஆசை இருக்கு. வர வேண்டும் என்ற எண்ணமும் இருக்கு. ஆனால் இப்போது வரவில்லை அப்படித்தானே’’ என்று கேட்க, அதற்கு கீர்த்தி சுரேஷ், ‛‛இருக்கலாம்.. இல்லாமலும் இருக்கலாம்’’ எனக்கூறி சிரித்தபடி நழுவினார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications