குஷ்புவுக்கு இடுப்பு எலும்பில் அறுவை சிகிச்சை! ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்த அப்போலோ மருத்துவமனை!
சென்னை: நடிகை குஷ்புவுக்கு இடுப்பு எலும்பு பகுதியில் உள்ள வால் எலும்பில் (Tail bone) நுண்துளை அறுவைச் சிகிச்சை ஒன்று நடந்துள்ளது.
அதிநவீன முறையிலான மைக்ரோ இன்சிஷன் தொழில்நுட்பத்தில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றதால் ஒரே நாளில் அவரை டிஸ்சார்ஜ் செய்திருக்கிறது அப்போலோ மருத்துவமனை.
தற்போது வீட்டில் முழுமையாக ஓய்வெடுத்து வரும் குஷ்பு குறைந்தது ஒரு மாதத்திற்காவது எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது.

நடிகை குஷ்பு
பாஜக நட்சத்திரப் பேச்சாளரும், நடிகையுமான குஷ்பு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இடுப்பு பகுதியில் அமைந்துள்ள வால் எலும்பில் (Tail bone) ஏற்பட்ட வலியால் மிகுந்த அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தல் முதல் அவருக்கு இந்த பிரச்சனை இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே உடல் எடையை குறைத்த பின்னரும் இடுப்பு வால் எலும்பில் (Tail bone) குஷ்புவுக்கு வலி குறைந்தபாடில்லை. இதனால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இதற்கான சிகிச்சைகளை தொடங்கினார்.

அறுவைச் சிகிச்சை
இந்நிலையில் மருத்துவர்கள் அறுவுரைப்படி அதிநவீன தொழில்நுட்பம் மூலம் மைக்ரோ இன்சிஷன் முறையில் நுண்துளை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட குஷ்பு இப்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அறுவை சிகிச்சையானது அட்வான்ஸ்டு தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்பட்டதால் தொடர்ந்து மருத்துவமனையில் தங்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. இதனிடையே இது குறித்து தகவலறிந்த அவரது அரசியல் மற்றும் சினிமா நண்பர்கள் குஷ்புவிடம் நலம் விசாரித்து வருகிறார்கள்.

கட்டாயம் ஓய்வு
மருத்துவர்கள் அறிவுரைப்படி குஷ்பு ஓய்வில் இருந்து வருவதால், குறைந்தபட்சம் இன்னும் ஒரு மாதத்திற்காவது அவர் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. முதலில் இந்த அறுவைச் சிகிச்சையை அவர் வெளிநாட்டில் மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் வெளிநாட்டிற்கு இணையான தொழில்நுட்ப வசதி அப்போலோ மருத்துவமனையில் இருப்பதால் குஷ்பு தனது முடிவை மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

முழங்கால் அறுவைச் சிகிச்சை
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கீழே வழுக்கி விழுந்ததால், நடிகை குஷ்புவுக்கு முழங்கால் பகுதியில் அதற்கான சிறிய அறுவைச் சிகிச்சை ஒன்று நடைபெற்றது திரும்பிப்பார்க்கத் தக்கது. இதனிடையே இது தொடர்பாக அவரது உதவியாளர் ப்ரியாவிடம் நாம் பேசினோம், குஷ்பு நார்மலாக இருப்பதாகவும் ஒரு சிறிய பிரசிஜர் தான் ஒரே நாள் வீட்டுக்கு வந்துவிட்டார் எனவும் விளக்கம் அளித்தார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி












Click it and Unblock the Notifications