Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வார்த்தையை விட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.. நாய் வாலை நிமிர்த்த முடியாது! தமிழிசைக்கு குஷ்பூ சப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக முன்னாள் தலைவரும் தெலுங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் குறித்து திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனிடைய தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினர் என்ற முறையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு தொடர்வதாக நடுகையும் பாஜக பிரமுகருமான குஷ்பூ அதிரடியாக தெரிவித்துள்ளார்.

பரபரப்பு, ஆபாச பேச்சுகளால் சற்று பிரபலமான திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சர்ச்சை வளையத்திற்குள் வந்திருக்கிறார். ஏற்கனவே பாஜவில் உள்ள நடிகை குஷ்பு, ராதிகா சரத்குமார் பற்றிய பேச்சால் விமர்சனத்திற்கு ஆளானார்.

Khushbu DMK Shivaji Krishnamurthy Tamilisai Soundararajan

ஆளுநர் ரவி, பாஜகவில் உள்ள நடிகைகள் குறித்து திமுக மேடைகளில் அவர் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கடும் கண்டனங்களை பெற்று தந்தது. இதையடுத்தே கட்சியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்

திமுக பேச்சாளராக இருக்கும் அவர் மேடைப் பேச்சுகளின் போது மிகவும் ஆபாசமாக பேசுவதையும் கெட்ட வார்த்தைகளை உபயோகித்து பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர்களை மிகக் கடுமையாக விமர்சிக்கும் வழக்கத்தை கொண்டவர். மேலும் பெண் தலைவர்களை பற்றி பேசும்போது கடுமையாகவும் ஆபாசமான கருத்துக்களை கொண்டும் விமர்சித்து வந்தார். இதை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் புகார் கொடுத்தனர்.

விவகாரம் பெரிதானதை அடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதோடு காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 60 நாள் சிறைவாசத்திற்கு பிறகு மீண்டும் வெளிவந்த அவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தான் பேசியது தவறு என வருத்தம் தெரிவித்ததோடு மீண்டும் கட்சியில் சேர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும், சமீபத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர் இரண்டு மணிக்கு மனைவியை எழுப்பி பாஜகவில் இணைய போவதாக சரத்குமார் கூறியதை வைத்து ஆபாசமாகவும் கொச்சையாகவும் சில கருத்துக்களை பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது ட்விட்டரிலும் கடும் கண்டனங்கள் எழுந்து நிலையில் அதனை ராதிகா சரத்குமாரும், நடிகையுமான குஷ்பூவும் பதிலடி கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் அமித்ஷா தமிழிசை சௌந்தரராஜன் இடையேயான உரையாடல் சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. இந்த நிலையில் திமுக நிகழ்ச்சியில் ஒன்றில் இதுகுறித்து பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தமிழிசை சௌந்தரராஜனின் உருவம் குறித்தும் சில அவதூறான கருத்துக்களை பேசி இருந்தார். மேலும் ஆபாசமான சில கருத்துக்களை மேடையில் அவர் பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த வீடியோ குறித்து குஷ்பூ கடும் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். அதில்" நாய் வாலை நிமிர்த்த முடியாத ஒரு பழமொழி உண்டு.அதுபோல தான் இந்த மனிதனும். மீண்டும் மீண்டும் பெண்களை மிகவும் புண்படுத்தும் வகையில் துஷ்பிரயோகம் செய்து வருகிறார். முதல்வர் ஸ்டாலின் திரும்பவும் இவரை கட்சியில் இணைப்பதற்காக மட்டுமே சஸ்பெண்ட் செய்துள்ளார். இடைவேளை நேரத்தில் மகிழ்விக்க இந்த வகையான நோய்வாய்ப்பட்ட மனம் கொண்டவர்கள் முதல்வருக்கு தேவையாக இருக்கிறார்கள்

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இவர் மீது வழக்கு தாக்கல் செய்ய போகிறேன். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பது குறித்து கடுமையான பாடத்தை அவருக்கு கற்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.. மீண்டும் நான் சொல்கிறேன், இத்தகைய ஆண்கள் அவர்கள் பெற்ற வளர்ப்பை மட்டுமே காட்டுகிறார்கள்.. தங்கள் குடும்பத்தில் பெண்களின் அவலத்தை காட்டுகிறார்கள்..

அக்கா தமிழிசை சவுந்தரராஜன் பாஜகவில், மிகவும் மதிக்கப்படும் உறுப்பினர். மேலும் எங்கள் பாஜக குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் அவருக்கான உரிய மரியாதையைத் தொடர்ந்து பெற்றுத் தருவோம்.. எலும்புக்கூடுகள் அலமாரியில் இருந்து விழ ஆரம்பித்தால் திமுகவுக்கு இந்த முட்டாள்களுக்கு தங்கள் அசிங்கமான முகங்களை எங்கு மறைப்பது என்று தெரியாது. திமுகவில் பெண்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு நீண்ட வரலாறு உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்." என கடுமையாக விமர்சித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+