நடிகை குஷ்புவின் எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்த மர்மநபர்கள்! இன்ஸ்டாவில் உதவி கேட்டு போஸ்ட்
சென்னை: நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் எக்ஸ் வலைதள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக இன்ஸ்டா பக்கத்தில் நடிகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது: நண்பர்களே எனது எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. என்னால் லாகின் செய்ய முடியவில்லை. என் யூசர் நேம், பாஸ்வேர்டு போட்டாலும் ஏற்றுக் கொள்ளவில்லை.

நான் பிளாக் செய்யப்பட்டுவிட்டேன். கடந்த 9 மணி நேரங்களாக என் ட்விட்டர் பக்கத்தில் இருந்து செய்திகளோ பதிவுகளோ, எந்தவிதமான நடவடிக்கையும் என்னால் செய்யப்பட்டவை அல்ல. எனது ட்விட்டர் பக்க பிரச்சினையை சரி செய்ய முயற்சிக்கிறேன்.
இதனிடையே எனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஏதாவது பதிவுகளை பார்த்தால் தயவு செய்து எனக்கு தெரிவியுங்கள். விரைவில் ட்விட்டரில் உங்களை எல்லாம் சந்திக்கிறேன், அதுவரை இன்ஸ்டாவில் பதிவிடுகிறேன் என தெரிவித்துள்ளார்.

மற்றொரு இன்ஸ்டா பதிவில் அவர் கூறியிருப்பதாவது: என் ட்விட்டர் பக்கத்தை எப்படி மீட்டெடுப்பது என யாருக்காவது தெரிந்திருந்தால் எனக்கு உதவி செய்யுங்கள். அவசரம் என குறிப்பிட்டுள்ளார்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை!












Click it and Unblock the Notifications