தமிழ் சினிமாவில்.. எந்த நடிகர்கள்லாம் சீண்டல் செய்யாத நல்லவங்க தெரியுமா? லட்சுமி ராமகிருஷ்ணன் லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மலையாள திரையுலகில் அன்றாடம் பாலியல் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ் திரையுலகில் இந்த நடிகர்கள் எல்லாம் கட்டாய பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதில்லை என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையாள சினிமாவில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக நடிகைகளின் பாலியல் குற்றச்சாட்டு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. அதிலும் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு பல நடிகைகள், முன்வந்து புகார் அளித்து வருகிறார்கள்.

hema committee report malayalam cinema

ஹேமா கமிட்டி அறிக்கையில் கூறப்பட்ட அம்சங்கள் என்னவென்றால் மலையாள திரையுலகம் 15 பேர் கொண்ட மாபியாக்களின் பிடியில் சிக்கியிருப்பதாக நடிகைகள் குற்றம்சாட்டுகிறார்கள். நடிகைகளை அரைக்குறை ஆடைகளில் தேவையின்றி நடிக்க வற்புறுத்துகிறார்கள்.

அது போல் ஒரு நடிகர், தன்னை கட்டிப் பிடிக்கும் காட்சியில் நடிப்பதற்கு 17 முறை ரீடேக்குகள் வாங்கியதாகவும் நடிகை குற்றம்சாட்டியிருந்தார். அது போல் சம ஊதியம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என நடிகைகள் குற்றம்சாட்டினர்.

உடை மாற்ற வேண்டும் என்றாலும் கூட எங்காவது மரத்தின் பின்புறம் நின்று மாற்றும் அவலம் இருப்பதாகவும், மாதவிடாய் சமயத்தில் நாப்கின் மாற்ற கூட முடியாமல் தவிப்பதாகவும் நடிகைகள் புகாரில் தெரிவித்திருந்தனர். அது போல் கழிப்பறை இல்லாததால் நடிகைகள் ஷூட்டிங்கில் தண்ணீர் குடிப்பதே இல்லை என்றும் புகார் எழுந்துள்ளது. மேலும் சம ஊதியம், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு ஹேமா கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.

இந்த நிலையில் கேரள திரையுலகில் மட்டும்தான் இந்த பாலியல் வக்கிரங்கள் நடக்கின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு ஊர்வசி உள்ளிட்டோர் சினிமா துறையில் மட்டும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் நடக்கிறது என சொல்ல முடியாது. எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன. அது போல் கேரள சினிமா துறையில் மட்டும் இது நடப்பதில்லை.

தமிழிலும் இருக்கிறது. ஆனால் கேரளாவை போல் எந்த பெண்ணும் தைரியமாக அது குறித்து பேச முன்வரவில்லை என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த பாலியல் சீண்டல்கள் குறித்து நடிகர் விஷால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் சினிமா வாய்ப்புக்காக யாராவது அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால் செருப்பால் அடியுங்கள்.

கேரளத்தை போல் தமிழகத்திலும் ஹேமா கமிட்டி போல் ஒரு குழு இன்னும் சில நாட்களில் அமைக்கப்படும் என விஷால் தெரிவித்திருந்தார். விஷால், தன்னை பாலியல் ரீதியிலாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றிவிட்டார் என ஏற்கெனவே ஸ்ரீரெட்டி அவர் மீது புகார் கூறியிருந்தார். அந்த புகார் குறித்து விஷாலிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, ஸ்ரீரெட்டி யாரென்றே எனக்கு தெரியாது. அவர் செய்த சேட்டைகள் எல்லாம் எனக்கு தெரியும் என பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில் ஸ்ரீரெட்டியோ, "நீயே (விஷால்) ஒரு பிராடு, என்னிடம் நிறைய செருப்புகள் இருக்கின்றன" என விஷாலை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் விஷாலின் இந்த பேச்சுக்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: கேரளாவில் பெண்கள் முன்வந்து பாலியல் புகார் கொடுத்த விஷயம் மிகவும் நல்லது.

hema committee report malayalam cinema

இது போன்ற பாலியல் துன்புறுத்தல்கள் எல்லா துறைகளிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. கேரளாவில் மட்டும் இல்லை தமிழ் சினிமாவிலும் இது போன்ற பாலியல் தொல்லைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதிக பணநடமாட்டம் உள்ள துறை சினிமா துறை என்பதால் இங்கு அதிகாரம் செலுத்தும் நபர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் விஷால் இந்த விஷயத்திற்கு குரல் கொடுப்பதற்கு முன் நடிகர் சங்கத்தை அவர் ஒழுங்குப்படுத்த வேண்டும். நடிகைகள் தங்களுக்கு ஒரு பிரச்சினை என்று வந்து நடிகர் சங்கத்தை அணுகும் போது அவர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் அச்சமும் இல்லாமல் கூறுகிறார்களா? என விஷால் கவனிக்க வேண்டும்.

அது போல் இயக்குநர் பாரதிராஜா எந்த பாலியல் சுரண்டலிலும் ஈடுபடவில்லை. நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, அருள்நிதி, சிவகார்த்திகேயன் போன்ற இளம் நடிகர்களும் அது போன்ற பாலியல் சுரண்டல்களில் இதுவரை ஈடுபட்டதில்லை. ரிலேஷன்ஷிப் என்பது வேறு கட்டாயப்படுத்துதல், அதாவது நீ வந்தால்தான் பட வாய்ப்பு என்பது வேறு என லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+