மீனாவின் கணவர் வித்யாசாகர் இறப்பிற்கு வராதது ஏன்.. 30 ஆண்டுகால தோழி மகேஸ்வரி உருக்கம்+ வேண்டுகோள்
சென்னை: நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் இறப்பிற்கு நடிகை மகேஸ்வரி வராதது ஏன் என்பது குறித்து அவர் அளித்துள்ள பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
1990களில் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக ரஜினிகாந்துடன் நடித்துவிட்டு அவருடன் எஜமான் படத்தில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். மீனாவின் உடல் மொழி மட்டும் அல்ல கண்களும் பேசும்.

அந்த அளவுக்கு அழகான கண்களை உடையவர். அவர் திரைத் துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆனதை அடுத்து விழா எடுத்துக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ரஜினி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நேரில் வந்து மீனா குறித்து வாழ்த்தி பேசியிருந்தனர்.
மீனா கடந்த 2009ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியரான வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். மீனாவின் மகளும் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு கடந்த ஆண்டு இறந்துவிட்டார்.
இவருடைய இறப்பிற்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்திருந்தார். பெங்களூரில் புறாக்கள் அதிகமாக இருப்பதாகவும் அதன் எச்சத்திலிருந்து வித்யாசாகரின் நுரையீரலுக்கு தொற்று பரவியதாகவும் இதனால் நுரையீரல் மாற்று சிகிச்சைக்கா காத்திருந்து யாரும் கிடைக்காத நிலையில் வித்யாசாகர் இறந்துவிட்டார்.
மீனாதான் தனது கணவருக்கான இறுதி சடங்குகளை செய்தார். அவர் இந்த இழப்பிலிருந்து வெளியே கொண்டு வர கலா மாஸ்டர், நடிகை சங்கவி, சங்கீதா, ஸ்ரீதேவி உள்ளிட்டோர் முயற்சி செய்து அவரை கொஞ்சம் கொஞ்சமாக வெளியுலகிற்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில் மீனா 40 நிகழ்ச்சியில் நடிகை மகேஸ்வரி பல விஷயங்களை பேசியிருந்தார்.
அவர் பேசுகையில் நானும் மீனாவும் 30 ஆண்டுகளாக தோழிகள். மீனாவின் கணவர் வித்யாசாகரை மீனா எப்போது சந்தித்தாரோ அது முதலே எனக்கு அவரை தெரியும். அவர் மிகவும் நல்லவர், கடைசியாக நான் சாகரை ஹைதராபாத்தில் ஒரு விருந்து நிகழ்ச்சியில் பார்த்தேன். மிகவும் அன்பான மனிதர். நேர்மையாகவும் இருந்தார். மீனாவின் கணவர் இறப்பு செய்தி கேட்டதும் எனக்கு அவரை அந்த கோலத்தில் பார்க்க மனதில் தைரியமில்லை.
இன்னொரு பக்கம் சாகரை அந்த கோலத்தில் பார்க்க எனக்கு விருப்பமும் இல்லை. எல்லாவற்றுக்கும் மேல் மீனாவை கணவர் இல்லாத கோலத்தில் பார்க்கவும் எனக்கு மனமில்லை. அதனால் நான் அவரை அடுத்த நாள் வந்து சந்தித்து ஆறுதல் கூறினேன். என்னை சாகர் மேகி மேகி என்றுதான் அழைப்பார். இது மாதிரியான இறப்புகளில் தேவையில்லாத தகவல்களை சிலர் பரப்பினார்கள். ஒரு துக்க நிகழ்ச்சியில் ஒருவர் துக்கத்தில் இருக்கும் அவரது இறப்பு குறித்து தவறான தகவல்களை சுய லாபத்திற்காக பரப்புவது தவறான விஷயம் என மிகவும் உருக்கமாக பேசினார்.












Click it and Unblock the Notifications