காஞ்சன மாலா.. இந்த உடம்பு நனைச்சு ரொம்ப நாளாகுது.. வைரலாகும் மனோரமா வீடியோ
தண்ணீர் பஞ்சத்தை அடிப்படையாக வைத்து மனோரமா பேசிய வசனம் வைரலாகிறது
Recommended Video
சென்னை: நமக்கு தண்ணி பஞ்சம்னு தெரியும்.. ஆனா எந்த அளவுக்குன்னு சொல்ல முடியாத அளவுக்கு பஞ்சம் பல்லிளித்து வருகிறது.
தமிழ்நாடு பூராவும் இந்த பிரச்சனை இருந்தாலும், நம் நெட்டிசன்கள் இந்த விஷயத்துக்கும் மீம்ஸ் போட்டு கலக்கி வருகிறார்கள்.

எந்த அளவுக்கு பஞ்சம் நிலவுகிறது என்பதை ஒரு படத்தில் வரும் சீனை போட்டு தெறிக்க விட்டுள்ளார்கள். அந்த காட்சியில் மறைந்த ஆச்சி மனோரமாவும், நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியும் பேசிக் கொள்ளும் வசனம்தான் இது:
மனோரமா: ஏன் சட்டையை கழட்டறீங்க?
வெ.ஆ.மூர்த்தி: குளிக்கதான்..
மனோரமா: ஒன்னும் வேண்டாம்.. (கையில் வைத்திருந்த சொம்பில் இருந்து நீரை அவர் மீது தெளிக்கிறார்) நாதா.. ஒன்னு.. ரெண்டு.. மூணு..
வெ.ஆ.மூர்த்தி: என்ன பண்ற?
மனோரமா: நீங்க இப்போ குளிச்சிட்டீங்க.. மூஞ்சியை துண்டால துவட்டிக்குங்க... சொல்றேன் இல்லை.. துவட்டிக்குங்க..
வெ.ஆ.மூர்த்தி: காஞ்சனமாலா.. இந்த உடம்பு நனைச்சு ரொம்ப நாளாகுது.. அந்த சொம்பு தண்ணியை கொஞ்சம் கொடேன்..
மனோரமா: ஆங்.... தண்ணி பஞ்சமா இருக்கு. சொம்பு தண்ணியை குடுக்கறதா.. (என்று ஒன்னு, ரெண்டு, மூணு சொல்லி தன் மீதும் தண்ணீரை தெளித்து கொள்கிறார்)
வெ.ஆ.மூர்த்தி: நீ என்ன பண்றே?
மனோரமா: குளிச்சிட்டு இருக்கேங்க.. அந்த மஞ்சளை எடுங்க.." என்று சொல்கிறார்.
இந்த வீடியோவைதான் நம்ம ஆட்கள் வைரலாக்கி விட்டுள்ளனர். தண்ணி பஞ்சத்துக்கு நடுவே சிக்கி சின்னாபின்னமாக ஓடிக்கொண்டு இருக்கிறது இந்த காமெடி சீன்!
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications