கணவர் நினைவு.. கவலையில் மீனா.. இன்ஸ்டாவில் போட்ட பதிவு.. ரசிகர்கள் ஆறுதல்
சென்னை: வாழ்க்கை என்பது ஒரு ரோலர் கோஸ்டர் மாதிரி அதில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் என நடிகை மீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
1990 களில் பலரது கனவுக்கன்னியாக இருந்தவர் கண்ணழகி நடிகை மீனா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். 30 ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்து வருகிறார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
சுமார் 13 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக சென்ற மீனாவின் வாழ்வில் கடந்த ஜூலை மாதம் சூறாவளி அடித்தது. மீனா கணவரின் இரு நுரையீரல்களும் செயலிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாற்று நுரையீரல் கிடைக்காததால் மற்ற உறுப்புகளும் செயலிழந்து அவர் காலமானார்.

மருத்துவமனை
வாழ வேண்டிய வயதில் அதுவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சில நாட்களிலேயே உடல்நிலை மோசமாகி இறந்தது மீனாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 10 வயதில் அப்பாவிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டிய நைனிகாவுக்கும் தந்தையின் மரணம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

கணவருக்கு இறுதி சடங்கு
கணவருக்கு இறுதி சடங்குகளை மீனாவே செய்தார். அமைதியான கடலில் திடீரென புயல் வீசி சென்றது போல் ஏற்பட்ட இந்த சம்பவத்திலிருந்து மீனாவை மீட்க அவரது தோழிகள் உதவி வந்தனர். அவ்வப்போது மீனாவை நடிகைகள் சங்கவி, சங்கீதா, ரம்பா உள்ளிட்டோர் சந்தித்து அவரை ஆசுவாசப்படுத்தினர்.

மீனா கணவர் மரணம்
அது போல் மீனா கணவர் மரணம் தொடர்பாக பிரஸ்ஸிற்கு தகவல் கொடுத்தது முதல் அனைத்து காரியங்களையும் உடனிருந்து செய்தவர் கலா மாஸ்டர். அவரும் அவ்வப்போது மீனாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார். இதன் எதிரொலியாக கணவர் இறந்து 40 நாட்கள் கழித்து தனது தோழிகளுடன் வெளியே சென்று மெல்லிய புன்சிரிப்புடன் நடிகை மீனா சில புகைப்படங்களை வெளியிட்டார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவ்
அது போல் மீனா சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர். தனது கணவருக்கு டோனாரின் நுரையீரல் கிடைக்காமல் போனதால்தான் இறந்தார். இனி அது போல் எந்த உயிரும் போகக் கூடாது என்பதால் உறுப்பு தானத்தின் அவசியத்தை உணர்த்த தான் உறுப்புதானம் செய்வதாக அறிவித்துள்ளார்.

ரோலர் கோஸ்டர்
இந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் வாழ்க்கை என்றால் என்ன என்பதை குறிப்பிட்டுள்ளார். தன் சிறு வயதிலிருந்து லேட்டஸ்ட்டாக எடுத்த புகைப்படங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை மீனா வெளியிட்டு கூறியிருப்பதாவது: வாழ்க்கை என்பது ஒரு ரோலர் கோஸ்டர் போன்றது. வாழுங்கள். நம்மிடம் இருப்பது இந்த நிமிடங்கள் மட்டுமே என வாழ்க்கையின் தத்துவத்தை அழகாக விளக்கியுள்ளார் மீனா.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications