நடிகை மீனாவா வீடியோவில்.. உருக்கமாக கேட்டும் ஓயாத வதந்திகள்.. இன்னும் 3 நாளில் அந்த நிகழ்வு
நடிகை மீனாவின் கடந்த வருட திருமண நாள் போஸ்ட் இணையத்தில் வைரலாகிறது
சென்னை: நடிகை மீனா, தன்னுடைய கணவரின் மரணம் குறித்து தயவு செய்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டும், அடுத்தடுத்த புரளிகளை சிலர் கிளப்பிவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
பிரபல நடிகை மீனா, கடந்த 2009-ம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த வித்யாசாகர் என்பரை திருமணம் செய்துகொண்டார்.. இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது..
சென்னை கோட்டூர்புரம் பகுதியில் மீனா தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்... கடந்த 3 நாட்களுக்கு முன்பு, மீனாவின் கணவர் வித்யாசாகர் திடீரென மரணமடைந்தது, ஒட்டுமொத்த திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சோஷியல் மீடியா
இவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்ததாகவும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. இதனைத் தொடர்ந்து மீனாவின் கணவர் வித்தியாசகர் உடலுக்கு திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.. மீனாவுக்கு கடைசிவரை கூடவே இருந்து ஆறுதல் சொன்னார்கள்.. இதனிடையே மீனாவின் கணவர் மரணம் குறித்து சோஷியல் மீடியாக்களிலும், மற்றும் யூடியூப் வீடியோக்களிலும் பல சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாக ஆரம்பித்துவிட்டன.

திடீர் குழப்பம்
இந்த தகவல்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. உடல்நலம் பாதிக்கப்பட்டு, 95 நாட்களாக சுயநினைவு இழந்திருந்த நிலையில், அந்த நினைவு திரும்பாமலேயே வித்யாசாகர் உயிர் பிரிந்ததாக கூறப்பட்ட நிலையில், மீனாவுக்கும், அவரது கணவருக்கும் மனக்கசப்பு இருந்து வந்ததாகவும், மீனா, கணவருடன் பேசியே பல மாதங்கள் என்றும் கிளப்பி விட்டனர். கடைசிவரை மீனா மீது கணவருக்கு நிறைய சந்தேகம் இருந்ததாகவும், அதனாலேயே இவர்கள் பிரிந்து வாழ்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.

உருக்கமான பதிவு
சாகும்போது, வித்யாசாகர் உடம்பெல்லாம் காயங்கள் இருந்தன என்றும், அந்த காயங்களை அப்படியே மூடிமறைத்துவிட்டனர் என்றும் புரளியை கிளப்பிவிட்டனர்.. இத்தகைய தகவல்கள்தான் மீனாவை நிலைகுலைய வைத்துவிட்டது. இதனால்தான், அனைத்து ஊடகங்களும் எங்களது தனிப்பட்ட உணர்ச்சிக்கு மதிப்பு அளித்து இந்த சூழலில் எங்களின் நிலையை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்... தயவு செய்து எனது கணவரின் மரணம் குறித்து தவறான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் என்று மீனாவே உருக்கமாக பதிவிட்டு கோரிக்கை விடுத்திருந்தார்.

மீனா - வதந்திகள்
அப்படி இருந்தும், மீனா குறித்த வதந்திகள் ஓயவில்லை.. இன்னொரு வதந்தி கிளம்பிவிட்டது.. மீனா கணவர் இறந்து ஒரு வாரமே ஆகிய நிலையில், மீனா மறுபடியும் ஷூட்டிங்கிற்கு வந்துவிட்டாராம்.. அது தொடர்பான வீடியோக்கள், போட்டோக்களையும் விஷமிகள் பரப்பி கொண்டு வருகின்றனர்.. ஆனால், இந்த போட்டோக்கள் உண்மை கிடையாதாம்.. 2 மாதத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது என்பதை மீனாவே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

வானவில் - மீனா
எவ்வளவுதான் மீனா கெஞ்சி கேட்டு, வேண்டிக் கொண்டாலும்கூட, சில அரக்ககுணம் படைத்தோர் மனம் மாறியதாக தெரியவில்லை. மீனாவுக்கு வரும் 12ம் தேதி, 14வது திருமண நாள் வர உள்ளது.. இந்நிலையில், கடந்த ஆண்டு தனது திருமணநாளின்போது மீனா ஷேர் செய்த பதிவு ஒன்றினை ரசிகர்கள் வைரலாக்கி கொண்டு வருகிறார்கள்..
Recommended Video

ஃபேவரேட்
கடந்த ஆண்டு தன்னுடைய திருமண நாளின்போது, மீனா தனது இன்ஸ்டா பக்கத்தில், வானவில் போல என் வாழ்வில் வந்து அதை அழகாக வண்ணமயமாக்கி விட்டாய். சேர்ந்தே இருப்பது அற்புதம்.. மேலும் மை ஃபேவரேட்.. நீங்கள் கொடுத்த புன்னகையை என்றென்றும் அணிந்திருப்பேன்... ஹேப்பி அனிவர்சரி கணவரே" என்று குறிப்பிட்டிருந்தார். இதனை இப்போது பதிவிட்ட மீனா ரசிகர்கள், "வானவில் என்று ஏன் சொன்னாய் மீனா? அது ஒருமுறை மட்டுமே தோன்றி மறைந்துவிடுமே.. இப்படி ஒரு துயரம் நடக்க போவதை தெரிந்துதான் கடந்த ஆண்டே இப்படி பதிவு செய்தீர்களா?" என்று வேதனையுடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications