சிக்கல் மேல் சிக்கல்.. புழல் சிறையில் உள்ள மீரா மிதுன் மீண்டும் கைது.. வேறு ஒரு வழக்கில் நடவடிக்கை!
சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் மீரா மிதுன் தற்போது வேறு ஒரு வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன் பட்டியல் இன மக்களை அவதூறாக பேசி நடிகை மீரா மிதுன் வீடியோ வெளியிட்டு இருந்தார். சர்ச்சையான கருத்துக்கள் அடங்கிய இந்த வீடியோ வைரலான நிலையில் இவருக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உட்பட பலர் போலீசில் புகார் அளித்தனர்.
இதில் மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 7 பிரிவுகளில் வழக்கும் பதியப்பட்டது. அதோடு இவரை விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் மீரா மிதுன் தலைமறைவானார்.

தலைமறைவு
போலீஸ் கைதுக்கு பயந்து கேரளாவில் தலைமறைவானவர் அங்கிருந்து வீடியோ போட்டு தொடர்ந்து திமிராக பேசி வந்தார். போலீசுக்கே சவால் விடுக்கும் வகையில் மீரா மிதுன் பேசி வந்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி கேரளாவில் மீரா மிதுனும் அவரது நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டனர்.

சிறை
இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மீரா மிதுன் தற்போது புழல் சிறையில் உள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பெயிலுக்கு விண்ணப்பித்து இருந்தார். எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும், நிறைய கால் ஷீட் கொடுத்துள்ளேன். அதனால் எனக்கு பெயில் வேண்டும் என்று மீரா மிதுன் கேட்டிருந்தார். ஆனால் நீதிமன்றமோ, நீங்கள் சிறைக்கு சென்று கொஞ்ச நாள்தான் ஆகிறது என்று கூறி பெயில் அளிக்க மறுத்துவிட்டது.

மறுப்பு
இந்த நிலையில் தற்போது புழல் சிறையில் இருக்கும் மீரா மிதுன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை எம்கேபி நகர் போலீசார் மீண்டும் இவரை கைது செய்துள்ளனர். ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மீரா மிதுனுக்கு எதிராக புகார் அளித்து இருந்தார். தனக்கு எதிராக அவதூறாக பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜோ மைக்கல் பிரவீன் மீரா மிதுனுக்கு எதிராக புகார் அளித்து இருந்தார்.

மிரட்டல்
இந்த நிலையில் மீரா மிதுனுக்கு எதிராக கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளில் இதில் வழக்கு பதியப்பட்டது. தற்போது அந்த புகாரின் கீழ் மீரா மிதுன் மீண்டும் புழல் சிறையில் கைது செய்யப்பட்டுள்ளார். எம்கேபி நகர் போலீசார் வாரண்ட் பெற்று மீரா மிதுனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் நாளை காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications