சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாப்பிள்ளை இவருதான்.. சட்டை மட்டும் அவருடையது இல்லை.. இப்படி இருக்கிறது நடிகை மேனகாவின் விளக்கம்!

நடிகை கீர்த்தி சுரேஷ் பாஜகவில் இணைவது குறித்து நடிகை மேனகா விளக்கம் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: "எங்க குடும்பம் என்னவோ பாஜக குடும்பம்தான்.. ஆனால் நாங்க பாஜக கிடையாது" இந்த வரி ஏதாவது புரியுதா? சரி விடுங்க... "மாப்பிள்ளை இவருதான்.. இவரு போட்டிருக்கிற சட்டை அவருடையது இல்லை" இது புரியுதா? அப்படித்தான் இருக்கிறது மேனகா அளித்துள்ள விளக்கமும்!

80'களில் நடிகை மேனகா ரொம்ப ஃபேமஸ்! ராமாயி வயசுக்கு வந்துட்டா என்ற படத்தில்தான் இவர் அறிமுகமானார்.

இந்த படத்தின் டைட்டில் அப்போது பெரும் கிளுகிளுப்பை ஏற்படுத்தியது. ரஜினி உள்ளிட்டவர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டனர்.

பாஜகவின் ட்விட்டர் பக்கத்தை ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 1.10 கோடியாக அதிகரிப்பு! பாஜகவின் ட்விட்டர் பக்கத்தை ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 1.10 கோடியாக அதிகரிப்பு!

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

இந்நிலையில், மேனகா டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு வந்தது பரபரப்பாகி வந்தது. இவரது மகள் கீர்த்தி சுரேஷ் பாஜகவில் இணைந்து விட்டதாகவும் செய்தி பரவியது. இதற்கு காரணம் கீர்த்திக்கு பட வாய்ப்பு இல்லாததே என்றும் சொல்லப்பட்டது. இதுகுறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

டெல்லி

டெல்லி

இதற்கெல்லாம் மேனகாவே இதுகுறித்து ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில், " என் கணவர் சுரேஷ் பாஜகவில் உள்ளார். ஆனால் நான் உறுப்பினர் இல்லை. பாஜகவுக்காக நான் பிரச்சாரம் செய்ய டெல்லி சென்றேன். அப்போது சினிமா பிரபலங்கள் மோடியை சந்திக்க செல்லும்போது, எங்களையும் கூப்பிட்டார்கள்.

பாஜக குடும்பம்

பாஜக குடும்பம்

சுரேஷ்கோபி, கவிதா என எனக்கு தெரிந்தவர்களே என்னை கூப்பிட்டதால் மறுக்க முடியவில்லை. அதனால் பாஜக ஆபீசில் குரூப் போட்டோ எடுத்து கொண்டோம். ஆனால் கீர்த்தி பாஜகவில் சேர்ந்துவிட்டதாக சொல்வது தவறு. எங்கள் குடும்பம் பாஜக குடும்பம்தான். ஆனால் நான், கீர்த்தி கட்சியில் இணையவில்லை. நாங்கள் இணைவதற்கு இன்னும் காலம் இருக்கு" என்றார்.

கேரளாவில் தாமரை

கேரளாவில் தாமரை

"காலம் இருக்கு" என்று ஒரு வார்த்தையை முன்கூட்டியே மேனகா சொல்லி இருப்பது கவனிக்கத்தக்கது. ஒருவேளை தமிழ்நாட்டில்தான் இல்லை.. கேரளாவிலாவது தாமரை மலர வேண்டும் என்று பாஜக கணக்கு போடுகிறதா என்றும் தெரியவில்லை. பார்ப்போம்!

English summary
Actress Menaka opens up on BJP rumours and explain is Keerthi Suresh join with
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X