காதலனை அறிமுகப்படுத்திய நடிகை மிருணாளினி.. யார்னு பாருங்க? அட.. மகாவிஷ்ணுவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சையில் சிக்கிய ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு பிரபல நடிகை மிருணாளினியை கரம் பிடிக்க இருக்கிறார். நடிகை மிருணாளினி, தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ் பெண்ணான மிர்னாளினி, பெங்களூரில் படித்தவர். பிறகு அங்கேயே மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றினார். டப்ஸ்மாஷ், டிக் - டாக் ஆகிய சமூக ஊடகங்கள் பிரபலமாக இருந்த சமயத்தில் அதில் தனது திறமையை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்தவர். பின்னர், சினிமா வாய்ப்பு தேடி வந்தது.

Actress Mirnalini and Mahavishnu Set to Marry Instagram Post Sparks Buzz

நடிகை மிருணாளினி

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மிருணாளினி ரவி.

அதைத்தொடர்ந்து, 'சாம்பியன்' படத்தில் நாயகி ஆனார். விஷால், ஆர்யா நடிப்பில் வெளியான 'எனிமி', 'எம்ஜிஆர் மகன்', 'ஜாங்கோ', விக்ரம் நடித்த 'கோப்ரா', 'ரோமியோ' உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார் மிருணாளினி.

தெலுங்கில், கட்டலகொண்டா கணேஷ், மாமா மச்சிந்த்ரா, ஆர்கானிக் மாமா ஹைபிரிட் அல்லுடு உள்ளிட்ட படங்களில் நடித்தார். மிருணாளினி ரவி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'ரோமியோ'. விஜய் ஆண்டனி நடித்த இந்தப் படம் கடந்த 2024ல் வெளியானது. அதன் பிறகு மிருணாளினி நடிப்பில் எந்தப் படங்களும் வெளியாகவில்லை.

காதலரை அறிமுகம் செய்த மிருணாளினி

இந்நிலையில், பிரபல ஆன்மீக பேச்சாளரான மகா விஷ்ணுவை தனது காதலர் என அறிமுகப்படுத்தி உள்ளார் நடிகை மிருணாளினி ரவி. இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் மிருணாளினி வெளியிட்டுள்ள பதிவில், "உங்களைக் காதலிக்க தொடங்கும்போது, என்னை நானே காதலிப்பது போல உணர்ந்தேன்.

ஒவ்வொரு பிறவியிலும், ஒவ்வொரு பிரபஞ்சத்திலும், நான் எப்போதும் உங்களையே தேர்ந்தெடுப்பேன்" எனப் பதிவிட்டுள்ளார். அத்துடன் மகாவிஷ்ணுவுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

யார் இந்த மகாவிஷ்ணு?

நடிகை மிருணாளினி தனது காதலர் என அறிமுகம் செய்துள்ளவர், ஆன்மீக பேச்சாளரான மகாவிஷ்ணு. இவர் பரம்பொருள் அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அமைப்பை நடத்தி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் அரசுப் பள்ளி ஒன்றில் பாவம், புண்ணியம் குறித்து மகாவிஷ்ணு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சியில், பார்வை மாற்றுத் திறனாளி ஆசிரியரை அவமதித்ததாக அவர் கைது செய்யப்பட்டார்.

அதன் பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். மகாவிஷ்ணு நடத்தி வந்த பரம்பொருள் அறக்கட்டளைக்கு பல நாடுகளிலும் கிளைகள் இருந்தன. சர்ச்சையில் சிக்கி கைதாகி வெளியே வந்த பிறகு, கடந்த ஆண்டு, பரம்பொருள் அறக்கட்டளை மூடுவதாக அறிவித்தார். தொடர்ந்து தனது ஆன்மீகப் பணியை வேறு வகையில் தொடர உள்ளதாகவும் கூறி இருந்தார். இந்நிலையில் தான், அவரை தனது காதலராக அறிமுகம் செய்துள்ளார் நடிகை மிருணாளினி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+