Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகை நமீதா.. "பெண்களுக்கு என்ன செஞ்சீங்க"..செய்தியாளர் கேட்டதுமே பாஜக நமீதாவோட பதில் இருக்கே, அடடடா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக விழாவில் திடீரென நமீதா பங்கேற்று பேசியிருந்தார். இதுகுறித்த வீடியோக்கள் இணையத்திலும் வெளியாகி ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, நிறைய பெண் பிரபலங்கள் அதிமுகவில் தங்களை வலிய வந்து மகிழ்ச்சியுடன் இணைத்து கொண்டனர்.. காரணம், அசாத்திய திறமைமிக்க ஜெயலலிதா, தங்களுக்கெல்லாம் ஒரு இன்ஸ்பியரேஷனாக இருப்பதாக அப்பெண் பிரபலங்கள் பூரித்து சொன்னார்கள்.

ரோஜா, விந்தியா: அதற்கேற்றவாறு, ஜெயலலிதாவும் உரிய மரியாதை தந்து, அவர்களை அதிமுகவின் பேச்சாளராகவோ, பொறுப்பாளராகவோ நியமித்துவிடுவார். அந்த வகையில் ரோஜா, விந்தியா இப்படி பல பேர் அரசியலில் மிளிர்ந்தனர். ஆனால், ரோஜாவும் சரி, விந்தியாவும் சரி, வேறு வேறு அரசியலை கையில் எடுத்து, இன்று அவரவர் கட்சிக்கு விசுவாசமாக இருந்து வருகிறார்கள்.

Actress Namitha participate in the Chennai Independence Day Function and praises the BJP Government

சீனியர் பிரமுகரான குஷ்பு, பன்முக திறமையால் அரசியலில் ஒளிர்ந்துவருபவர். யாராக இருந்தாலும், பயப்படாமல் துணிச்சலுடன் கேள்விகளை எழுப்புவார்.. இதே பாஜகவில் மேலும் பல பேச்சாளர்களும், பிரபலங்களும் இருக்கிறார்கள்.. ஆனால், இவர்கள் தேர்தல் சமயங்களில் மட்டுமே பிரச்சாரங்களுக்கு செல்வதாக தெரிகிறது. இதில் ஒருவர்தான் நமீதா.

தாமரைகள்: இவர் பாஜகவில் அன்று சேர்ந்ததுமே, தமிழக மக்கள் அதிர்ந்துதான் போனார்கள்.. பாஜகவில் நமீதா என்ன செய்ய போகிறார்? பிரச்சாரத்திற்கு போனாலும் என்ன பேச போகிறார்? என்ற ஆர்வமும் ஒட்டிக்கொண்டது. இதற்கு நடுவில், "தாமரை மலர்ந்தே தீரும்" என்ற வார்த்தையை நமீதாவால் சரியாக உச்சரிக்க முடியாத வீடியோக்களும் இணையத்தில் அப்போது டிரெண்டானது.

இப்போது விஷய என்னவென்றால், திடீரென பாஜக விழாவில் நமீதா வந்திருக்கிறார்.. எல்.முருகன் மாநில தலைவராக இருந்தபோது, ஜே.பி. நட்டா முன்னிலையிலேயே கட்சி சேர்ந்துவிட்டதால், தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் பொறுப்பும் நமீதாவை தேடி வந்தது. எல்.முருகன் மாநில தலைமையில் இருந்தவரை, அடிக்கடி கட்சி கூட்டத்தில் தென்பட்டு கொண்டிருந்த நமீதா, தற்போது அவ்வளவாக எங்கும் காணப்படுவதில்லை.

சுதந்திர விழா: நேற்று சுதந்திர தினம் என்பதால், தமிழக பாஜக சார்பில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது விழாவில் நமீதா பேசும்போது, மத்திய அரசின் திட்டங்களை விரிவாக சொன்னார். ஒரு பேப்பரில் எழுதி வைத்து, அந்த திட்டங்கள் குறித்து பேசினார்.

அப்போது ஒரு கோரிக்கையை பொதுமக்களுக்கு விடுத்திருந்தார்.. "அரசியலில் என்ன நடக்கிறது? என்பதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தவகையில் நம்முடைய நாட்டின் வளர்ச்சிக்காக 2 ஆப்கள் இருக்கின்றன... ஒன்று நமோ NAMO APP, இன்னொன்று சரல் ஆப்.. இந்த ஆப்களை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். தமிழக அரசுக்கு, மத்திய அரசு எவ்வளவு உதவி செய்திருக்கிறது என்பதெல்லாம் இந்த 2 ஆப்களில் உள்ளன என்றார்.

Actress Namitha participate in the Chennai Independence Day Function and praises the BJP Government

அண்ணாமலை யாத்திரை: அதேபோல, 4 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசியிருந்த நமீதா, அண்ணாமலை யாத்திரை சூப்பராக இருப்பதாகவும், யாத்திரையில் தானும் விரைவில் கலந்து கொள்ள போவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று சென்னையில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் நமீதா.

அப்போது ஒரு செய்தியாளர், பெண்களை பல்வேறு துறைகளில் ஊக்கப்படுத்துவதற்கு, பாஜக செயற்குழு உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் இதுவரை என்னென்ன முயற்சிகளை எடுத்துள்ளீர்கள் என்று கேட்டார்.

உதவிகள்: "என்னுடைய வீட்டில் வேலை செய்றவங்க எல்லாரும் பெண்கள்தான்.. 99 சதவீதம் பெண்களைதான் வேலைக்கு வைத்திருக்கிறேன்... அதில் 2 பெண்களுக்கு 22, 23 வயதாகிறது.. அவர்களுக்கு விரைவில் கல்யாணம் நடக்க போகிறது. நான்தான் அந்த திருமணத்தை செய்துவைக்க போகிறேன். இப்படி என் வீட்டில் வேலை பார்க்கும் பெண்களுக்கு நான் உதவி செய்து வருகிறேன். இது என் தனிப்பட்ட முறையில் இந்த உதவிகளை நான் செய்கிறேன்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+