அண்மையில் தான் தற்கொலை காட்சியில் நடித்தாராம் நடிகை நந்தினி! நிஜத்திலும் உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்
சென்னை: தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமான 'கௌரி' சீரியல் நடிகை நந்தினி, பெங்களூரில் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த படப்பிடிப்பில், நடிகை நந்தினி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் காட்சியில் நடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நந்தினி, கன்னட சின்னத்திரை உலகில் தனது பயணத்தைத் தொடங்கினார். ஜீவ ஹூவாகிடே, சங்கர்ஷா, மதுமகளு மற்றும் நீனாதே நா உள்ளிட்ட பல பிரபலமான கன்னட தொலைக்காட்சித் தொடர்களில் துணை வேடங்களில் நடித்தார். தற்போது தமிழில் வெற்றிகரமாகத் தடம் பதித்து வந்த நிலையில், விபரீத முடிவை எடுத்துள்ளார்.

தமிழில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் 'கௌரி' சீரியலில் துர்கா மற்றும் கனகா என்கிற பெயகள் கொண்ட இரட்டை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் நந்தினி. அவரது யதார்த்தமான நடிப்பால் குறுகிய காலத்திலேயே அதிக ரசிகர்களைப் பெற்றவர், திடீரென தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நந்தினி நடித்து வந்த'கௌரி' நேற்று இரவு பெங்களுரில் தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து பெங்களூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வளர்ந்து வந்த இளம் நடிகை இப்படி தற்கொலை செய்துகொண்டது ரசிகர்களையும், சக கலைஞர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கௌரி சீரியலின் ஷூட்டிங் ஆரம்பத்தில் பெங்களூரில் நடந்து வந்த நிலையில், சமீபகாலமாக இந்த சீரியலின் ஷூட்டிங் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதில், கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த படப்பிடிப்பில், நடிகை நந்தினி விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் காட்சியில் நடித்துள்ளார். இந்நிலையில் தான் அவர் பெங்களுர் சென்றிருந்த நிலையில் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு கூட இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டார் நந்தினி. அவரின் இந்த திடீர் மறைவை ரசிகர்களாலும், உடன் நடித்த சக நடிகர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பலரும், தங்கள் வேதனையை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அண்மையில், 'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகை ராஜேஸ்வரி உயிரிழந்த சோகம் மறைவதற்குள், மற்றொரு இளம் சீரியல் நடிகை தற்கொலை முடிவை எடுத்திருப்பது சின்னத்திரை வட்டாரத்தை நிலைகுலையச் செய்துள்ளது. தற்கொலை செய்து கொண்ட நந்தினிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications