சமந்தாவை போல் அட்டக்கத்தி நடிகைக்கும் சரும நோய்.. நினைவாற்றல் குறையும் அளவுக்கு பாதிப்பாம்!
சென்னை: அட்டக்கத்தி படத்தில் நடித்த நடிகை நந்திதா ஸ்வேதாவும் நடிகை சமந்தா போல் அரியவகை தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
நடிகை சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில் கையில் ஐவியில் டிரிப்ஸ் லைன் போட்டபடியே யசோதா படத்திற்கு டப்பிங் செய்து கொண்டிருந்தார். அவருக்கு மயோசிடிஸ் எனும் தோல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

தசை அழற்சி நோய்தான் மயோசிடிஸ். இது நமது நோய் எதிர்ப்பு சக்தியையே சிதைக்கிறது. இந்த எப்படி வருகிறது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. வைரஸ் தொற்றின் காரணமாக இந்த நோய் ஏற்படலாம் என தெரிகிறது. காய்ச்சல், பசியின்மை, தசை வீக்கம், படுக்கையிலிருந்து எழுந்திருப்பதில் சிரமம், சாப்பிடும் போதும் நீர் அருந்தும் போதும் சிரமம், இருமல், தோலில் சிவப்பு தடிப்புகள், தசை வலி ஆகியவை அறிகுறிகளாகும்.
அந்த நோயால் மிகவும் அவதிப்பட்ட சமந்தா, தற்போது ஓராண்டுக்கு படங்களில் நடிப்பதிலிருந்து விலகிக் கொண்டுள்ளார். அவர் தற்போது ஆன்மீக பயணம் மேற்கொண்டு விட்டு அமெரிக்காவில் தோல் நோய்க்கான சிகிச்சையை மேற்கொள்ள போகிறார். அந்த வகையில் நந்திதா ஸ்வேதாவுக்கும் தோல் நோய் ஏற்பட்டுள்ளது. இதை அவரே தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவை சேர்ந்தவர் நந்திதா ஸ்வேதா. இவர் விஜேவாக தனது பணியை தொடங்கினார். கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த நந்தா லவ்ஸ் நந்திதா என்ற கன்னட படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்த அவர் ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. மேலும் அவருக்கு அந்த படம் திருப்புமுனையாகவும் அமைந்தது. அட்டக்கத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார். இதையடுத்து நடிகர் விஜய்யுடன் புலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த படம் சரியாக போகவில்லை. அதன் பின்னர் நந்திதாவுக்கு படவாய்ப்புகளும் கிடைக்காததால் தெலுங்கு திரையுலகிற்கு தாவினார். தெலுங்கில் அவருக்கு அடுத்தடுத்து வித்தியாசமான வேடங்கள் கிடைத்துள்ளன. இதனால் அவர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். நந்திதா நடிப்பில் ஹிடிம்பா என்ற தெலுங்கு திரைப்படம் தயாராகியுள்ளது.

இந்த படம் வரும் நாளை திரைக்கு வருகிறது. இந்த நிலையில் ஹிடிம்பா படத்தின புரமோஷனுக்காக பேட்டி ஒன்றை நந்திதா அளித்திருந்தார். அதில் எனக்கு ஃபைப்ரோமியால்கியா எனும் அரியவகை நோய் இருக்கிறது. இதனால் உடல் எடையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு சின்ன வேலை செய்தால் கூட தசைகளில் பிரச்சினை ஏற்படும் அளவுக்கு அந்த நோய் தீவிரமாக உள்ளது.
இதனால் என்னால் உடல்பயிற்சிகளை கூட செய்ய முடியவில்லை. சில நேரங்களில் உடல் அசைவுகளுக்கே கஷ்டப்படும் நிலை உள்ளது. இதனால் நினைவாற்றல் குறைபாடு, உடல் சோர்வு ஏற்படுகிறது. இதையெல்லாம் தாண்டிதான் ஹிடிம்பா படத்திற்கு உடல் எடையை குறைத்து நடித்தேன். இவ்வாறு நந்திதா ஸ்வேதா தெரிவித்தார். அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications