Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தனுஷுக்கு என் மீது வெறுப்பு.. பழிவாங்குகிறார்.. பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை அடுக்கிய நயன்தாரா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தனுஷுக்கு எதிராக நடிகை நயன்தாரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனுஷுக்கு என் மீது தனிப்பட்ட வெறுப்பு, தனுஷின் பழிவாங்கும் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களது திருமண ஆவணப்படத்தில் பாடலை பயன்படுத்த விடாமல் தனுஷ் முட்டுக்கட்டை போட்டுள்ளார் என கடுமையான குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக முன்வைத்துள்ளார் நயன்தாரா.

'லேடி சூப்பர் ஸ்டார்' என கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான "நானும் ரவுடி தான்" திரைப்படத்தின் மூலம் தான் நயன்தாராவிற்கும், அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அது காதலாக மாற, கடந்த 2022 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

dhanush nayanthara vignesh shivan

தமிழ் சினிமாவின் ஸ்டார் திருமணமாக பெரும் ட்ரெண்டான இந்த திருமணம் தொடர்பான ஆவணப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்து வருகின்றனர். 2 ஆண்டுகள் ஆகியும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோ வெளியிடப்படாமல் இருந்து வந்த நிலையில், தாமதத்திற்கான காரணம் தெரியவந்துள்ளது.'நானும் ரவுடிதான்' படத்தின் பாடலை தங்களது வீடியோவில் பயன்படுத்த தயாரிப்பாளர் தனுஷிடம் அனுமதி கோரி இருந்த நிலையில், அவர் தாமதித்து வந்ததன் காரணமாகவே இதுவரை வெளியாகவில்லை எனத் தெரிகிறது.

நயன்தாரா கடிதம்: இந்நிலையில், நடிகர் தனுஷ் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கை விட்டுள்ளார் நடிகை நயன்தாரா. நயன் தாரா எழுதியுள்ள கடிதத்தில், "மதிப்பிற்குரிய தனுஷ் K ராஜா, S/O கஸ்தூரி ராஜா, B/O செல்வராகவன்.

பல தவறான விசயங்களை சரி செய்வதற்காகவே வெளிப்படையான இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதியிருக்கிறேன். உங்கள் தந்தை கஸ்தூரி ராஜா அவர்கள் உறுதுணையோடு, சிறந்த இயக்குநரான உங்கள் அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் திரைத்துறைக்கு எந்து பிரபல நடிகராக மாறியிருக்கும் நீங்கள் நிச்சயம் இதனை புரிந்துகொள்ள வேண்டும். சினிமா பின்புலம் எதுவும் இல்லாமல் தனி ஒரு ப்ண்ணாக, சவால்கள் நிறைந்த திரைத்துறைக்கு வந்து கடின உழைப்பாலும் நேர்மையான அர்ப்பணிப்பாலும் இன்றைய நிலையை அடைந்திருக்கிறேன். நேர்மறையான எனது பயணத்தை என் மீது அன்பு செலுத்தும் எனது ரசிகர்களும், திரைத்துறையினரும் நன்றாகவே அறிவார்கள்.

நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் Nayanthara Beyond the Fairy Tale ஆவணப்படத்தை என்னைப் போலவே ஏராளமான எனது ரசிகர்களும் நலம் விரும்பிகளும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ரசிகர்களின் அந்த ஆர்வத்தை பூர்த்தி செய்யவே இதில் பணியாற்றியிருக்கும் ஒவ்வொருவரும் பல்வேறு தடைகளையும் மீறி, அனைத்துப் பணிகளையும் முடித்து தற்போது வெளியீட்டுக்கு தயார் செய்திருக்கிறோம்.

தனுஷின் பழிவாங்கும் நடவடிக்கை: உங்களது தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும் எனது கணவரும் மட்டுமின்றி ஆவணப்பட பணிகளில் அர்ப்பணிப்போடு பங்காற்றிய ஒவ்வொருவரும் வெகுவாக பாதிப்படைந்திருக்கிறோம். காதல், திருமணம் உள்ளிட்ட எனது வாழ்வின் மகிழ்கான தருணங்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படத்தில் என் வாழ்வின் மகத்துவமான காதலை கண்டடைந்த 'நானும் ரௌடிதான்' திரைப்படம் இல்லாததன் வலி மிகவும் கொடுமையான.

நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் Nayanthara Beyond the Fairy Tale ஆவணப்படத்தில் 'நானும் ரௌடிதான்' படத்தின் காட்சிகளையும் பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில் உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெறுவதற்காக 2 வருடங்களாக காத்திருந்தோம். எங்கள் எவ்லாப் போராட்டங்களும் பலனளிக்காத நிலையில் அந்த முடிவையே கைவிட்டு ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம்.

என் மீதான வெறுப்பு: நானும் ரௌடிதான் திரைப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுவதற்கு முக்கியமான காரணம் இதயத்திலிருந்து எழுதப்பட்ட அதன் வரிகள். ஆனால், அந்த வரிகளைக் கூட ஆவணப்படத்தில் பயன்படுத்தக் கூடாது என்பது எந்த அளவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என்பது உங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் புரியும். தடையில்லா சான்றிதழ் (NOC) மறுக்கப்பட்டது வியாபார ரீதியானதாகவோ அல்லது சட்ட ரீதியானதாகவோ இருந்தால் நிச்சயமாக அதனை ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், முழுக்க முழுக்க என் மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமேயான உங்களது இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

சமீபத்தில் வெளியான டிரைலரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவிற்கு எதிராக Legal Notice அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிலும், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு ரூ. 10,00,00,000 (பத்து கோடி) நஷ்ட ஈடு கேட்கப்பட்டு இருப்பது மிகவும் விநோதமாக இருக்கிறது. கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவதைப் போல் ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது என்பதை நானும், எனது கணவரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம்.

இழிவான செயல்: எனது திரைப்பயணத்தின் இனிமையான நினைவுகளைக் கொண்ட பல்வேறு காட்சிகள் ஆவணப்படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அதற்கான அனுமதிக்காக வேறு தயாரிப்பாளர்களை அணுகியபோது பேரன்போடு அனுமதித்தார்கள். அப்போதுதான உங்களில் இருந்து எவ்வளவு மாறுபட்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. அதனால்தான் காலங்களைக் கடந்தும் கொண்டாடப்படுபவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

சட்டப்பூர்வமான உங்களது நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள நாங்களும் தயராகவே இருக்கிறோம். 'நானும் ரௌடிதான்' படம் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கும், பாடல்களுக்கும் தடையில்லா சான்றிதழ் வழங்காததற்கான Copy right காரணங்களை நீங்கள் நீதிமன்றத்தில் விளக்கிக் கொள்ளுங்கள். ஆனால், கடவுள் மன்றத்தில் நீங்கள் தெளிவுப்படுத்த வேண்டிய சில விசயங்கள் இருக்கின்றன.

காயம் ஆறாது: நானும் ரௌடிதான் வெளியாகி 10 ஆண்டுகளை கடந்த பின்பும் உங்களது இழிவான செயல்களை மறைக்கும் வகையிலான போலியான முகமூடியை அணிந்துகொண்டு உங்களால் வலம் முடியும். ஆனால், தயாரிப்பாளராக பெரும் வெற்றியைக் கொடுத்து, ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் ஒரு திரைப்படத்திற்கு எதிரான உங்களது கொடும் சொற்களை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது, அதனால் ஏற்பட்ட காயமும் என்றென்றும் ஆறாது. அந்தப் படத்தின் வெற்றி உங்களை உளவியல்ரீதியாக வெகுவாக பாதித்ததை சினிமா நண்பர்கள் மூலமாக தெரித்துகொண்டேன். பின்னர், சினிமா விழாக்களில் (Filmfare 2018) நீங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய விதம், சாதாரண பார்வையாளருக்கும் அதனை நன்றாகவே புரிய வைத்தது.

எந்த ஒரு துறையிலும் வியாபார ரீதியான போட்டிகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் ஒருவர் இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட முடியாது. அநாகரிகமான அந்த செயல்களைச் செய்வது செய்வது உங்களைப் போன்ற பிரபலமான நடிகரே ஆனாலும் தமிழ்நாட்டு மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

உங்களை பாதிக்காது: கடந்த காலத்தில் உங்களோடு பயணித்தவர்களின் வெற்றியை எந்த கோபமும் இல்லாமல் சமாதானத்துடன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என இந்த கடிதத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.

இந்த உலகம் எல்லோருக்குமானது. கடின உழைப்பால், கடவுளின் ஆசிர்வாதத்தால், மக்களின் பேரன்பால் சினிமாலில் எந்த பின்புலமும் இல்லாத ஒருவரும் இங்கு வெற்றி பெறுவலும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வதும் உங்களை எந்த விதத்திலும் பாதிக்காது.

ஜெர்மானிய வார்த்தை: அடுத்த இசை வெளியீட்டு விழாவில், இது எதுவுமே நடக்கவில்லை என மறுத்து, கற்பனையாக சில கதைகளைப் புனைந்து அதனையே உண்மையைப் போல் நீங்கள் சொல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் அதனை கடவுள் பார்த்துக் கொண்டிருப்பார் என்பதை மறந்து விடாதீர்கள். இந்த நேரத்தில் ஜெர்மனிய மொழியின் "Schadenfreude" எனும் வார்ததையை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். அந்த வார்த்தையின் அர்த்தத்தை தெரிந்து கொண்டு இனி யாருக்கும் அதனை செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

"மகிழ்வித்து மகிழ்" என்பதே உண்மையான மகிழ்ச்சி. கொண்டாட்டங்கள் நிறைந்த வாழ்வை எவயோரும் புன்னகையோடு கடக்க வேண்டும் என்பதையே எனது குறிக்கோளாகக் கொண்டிருக்கிறேன். அதனை அடிப்படையாகக் கொண்டே nayanthara beyond the fairy Tale ஆவணப்படமும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதனை ஒருமுறை பார்த்தால் உங்கள் எண்ணங்களும் நேர்மறையாக நிச்சயம் மாறும். எல்லா மேடைகளிலும் நீங்கள் சொல்லும் "Spread Love" என்பதை வெற்று வார்த்தைகளாய் மட்டுமின்றி வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும் என இனி நானும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+