நயன்தாராவுக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகைகள்.. தனுஷுடன் ஜோடியாக நடித்தவர்களே எதிரான டிவிஸ்ட்
சென்னை: நடிகை நயன்தாரா, நடிகர் தனுஷ் மோதல் விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது. தனது ஆவணப்படம் தொடர்பான விவகாரத்தில் தனுஷின் செயல்களை நயன்தாரா கடுமையாக விமர்சித்துள்ளார். அவரின் பதிவுக்கு தனுஷ் உடன் ஜோடியாக நடித்த பல நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தனது திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகை நயன்தாரா நடிகர் தனுஷ் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இதுகுறித்து நயன்தாரா தனுஷை குறிப்பிட்டு வெளியிட்டுள்ள விளக்கத்தில், நீங்கள் உங்கள் அப்பா, அண்ணன் உதவியுடன் சினிமாத்துறையில் பிரபலமாகியுள்ளீர்கள்.

நான் எந்த பின்புலம் இல்லாமல் கடின உழைப்பாலும், நேர்மையாலும் இந்த நிலையை அடைந்திருக்கிறேன். நானும் ரௌடிதான்' படத்தின் பாடல்களை ரசிகர்கள் இப்போதும் கொண்டாடுகிறார்கள். அதை என் திருமண ஆவணப்படத்தில் பயன்படுத்தக் கூடாது என்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தும். இது உங்களைத் தவிர மற்ற எல்லாருக்கும் புரியும்.
வியாபார ரீதியாகவோ அல்லது காப்புரிமையை காட்டி சட்டரீதியாகவோ மறுத்திருந்தால் பரவாயில்லை. ஆனால் என் மீது உங்களுக்குள்ள தனிப்பட்ட வெறுப்பால் வெளிப்படும் இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்க முடியும். சமீபத்தில் வெளியான எங்கள் திருமண ஆவணப்படம் தொடர்பான டிரெய்லரில் இடம்பெற்ற 3 விநாடி காட்சிக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருப்பது ஆச்சர்யமாக உள்ளது. அதை நாங்கள் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்.
மிகவும் கீழ் தரமான இந்த செயலின் மூலம், நீங்கள் எப்படிப்பட்ட மனிதர் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேடைகளில் உங்கள் ரசிகர்கள் முன்பு பேசுவதற்கும், உங்கள் நிஜம் எது என்பதை நானும், என் கணவர் விக்னேஷ் சிவனும் நன்கு அறிவோம். இதே ஆவணப்படம் தொடர்பாக நான் நடித்த பல படங்களின் தயாரிப்பாளர்களை அணுகினோம். அவர்கள் மிகுந்த அன்போடு ஆதரித்தார்கள். இதுதான் மற்றவர்களுக்கும், உங்களுக்குமான வித்தியாசம்.
போலியான முகமூடி அணிந்து கொண்டு உங்களால் தான் வலம் வர முடியும். நானும் ரெளடி தான் படம் வெற்றி உங்களால் ஏற்க முடியவில்லை என சினிமாத்துறை வட்டாரம் மூலம் தெரிந்து கொண்டேன். எல்லா துறையிலும் வியாபார ரீதியான போட்டி இயல்பு தான். உங்களை போல பிரபலமான நடிகராக இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். என்று கூறியிருந்தார்.
நயன்தாராவின் இந்த கருத்து சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூகவலைதளங்களிலும் இது வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே கடந்த காலங்களில் பாடகி சுசித்ரா தனுஷ் மீது பல்வேறு விமர்சனங்களை வைத்திருந்தார். பலரது தனிப்பட்ட வாழ்க்கையில் தனுஷ் தலையிடுவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் நயன்தாராவின் இந்தப் பதிவுக்கு சினிமாத் துறையில் இருந்தும் ஆதரவுகள் வந்து கொண்டிருக்கின்றன. நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருதி ஹாசன், பார்வதி (மரியான் படம்) நஸ்ரியா நசீம், அபிராமி, அனுபமா ஆகியோர் நயன்தாராவின் பதிவை லைக் செய்து அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே அந்தப் பதிவை சுமார் 3.2 லட்சத்துக்கு மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இந்நிலையில் நயன்தாராவின் குற்றச்சாட்டுக்கு தனுஷ் விரைவில் பதில் அளிப்பார் என்று அவரின் வழக்கறிஞர் அருண் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications